This Article is From Dec 23, 2019

Viral Video: பெரிய படகாயிருந்தா நல்லாயிருக்கும்ல…! படகில் ஏறிய கடல் சிங்கங்கள்

இந்த வீடியோவை செவ்வாயன்று வாஷிங்டன் இயற்கை வளங்கள் துறையின் பயிற்சியாளர் ஜோஸ் பிலிப்ஸ் படமாக்கியுள்ளார். வீடியோவை கீழே காணலாம்.

Viral Video: பெரிய படகாயிருந்தா நல்லாயிருக்கும்ல…! படகில் ஏறிய கடல் சிங்கங்கள்

இந்த வைரல் வீடியோ சில வேடிக்கையான எதிர்வினைகளையும் உருவாக்கியுள்ளது.

ஒரு படகில் இரண்டு பெரிய கடல் சிங்கங்கள் ஏறியக்கொண்டு சத்தமிடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் ஒலிம்பியாவுக்கு அருகிலுள்ள எல்ட் இன்லெட்டில் வெற்றுப் படகாகத் தோன்றும் இடத்தில் இரண்டு பெண் கடல் சிங்கங்கள் படகில் ஏறியதை காண முடிகிறது. 

இணையத்தில் வைரலான இந்த வீடியோவில், கடல் சிங்கத்தின் எடை தாங்காமல் ஒருபக்கமாய் தூக்கிக் கொண்டிருப்பதை காணலாம்.

செய்தி வலைத்தளமான கேஹெச்யூபடி, இந்த வீடியோவை செவ்வாயன்று வாஷிங்டன் இயற்கை வளங்கள் துறையின் பயிற்சியாளர் ஜோஸ் பிலிப்ஸ் படமாக்கியுள்ளார். வீடியோவை கீழே காணலாம்.

ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து படகில் ஓய்வெடுக்கும் இரண்டு கடல் சிங்கங்களின் வீடியோ ரெட்டிட், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பல்லாயிரக்கணக்கில் பார்வைகளை பெற்றுள்ளது. கமெண்டுகளின் மூலம்  பெரும் மகிழ்ச்சியையும் சுவாரஸ்யமான கேள்விகளையும் உருவாக்கியுள்ளது. கடல் சிங்கங்கள் உண்மையில் மிகப்பெரியதா…? அல்லது படகு மிகச் சிறியதா என்று மக்களிடமிருந்து கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்த வைரல் வீடியோ சில வேடிக்கையான எதிர்வினைகளையும் உருவாக்கியுள்ளது. 

வீடியோவை படமாக்கிய ஜோஷ் பிலிப்ஸ், மியாமி ஹெரால்டிடம் ஒரு நண்பருடன் வெளியே செல்லும் போது நங்கூரமிட்ட படகில் கடல் சிங்கங்களைப் பார்த்ததாகக் கூறினார். இதற்கு முன்பு இதைப்போல் பார்த்ததில்லை என்றும் கூறினார். 

is."

Click for more trending news


.