This Article is From May 14, 2019

‘ஹோம் ஒர்க் சரியா செய்றியா..?’- கண்காணிக்கும் நாய்; வைரலாகும் வீடியோ!

பயிற்சி கொடுக்கப்பட்ட அந்த நாயின் பெயர் ஃபான்டுவான்.

‘ஹோம் ஒர்க் சரியா செய்றியா..?’- கண்காணிக்கும் நாய்; வைரலாகும் வீடியோ!

இது குறித்த ஒரு வீடியோ, தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், தனது நாய்க்கு பிரத்யேக பயிற்சி கொடுத்துள்ளார். அதாவது, தன் மகள் வீட்டுப் பாடங்களை சரியாக செய்கிறாரா என்பதைப் பார்க்க அவர் நாய்க்கு பயிற்சி கொடுத்துள்ளார். இது குறித்த ஒரு வீடியோ, தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

பயிற்சி கொடுக்கப்பட்ட அந்த நாயின் பெயர் ஃபான்டுவான். ஒவ்வொருமுறை வீட்டில் இருக்கும் அந்தச் சின்னப் பெண், வீட்டுப் பாடம் செய்யும்போதும், ஃபான்டுவான், மேசை மீது கைகளை வைத்து நிற்கிறது. அந்த சுட்டிப் பெண் வீட்டுப் பாடங்களை முடிக்கும் வரை அங்கேயே நிற்கிறது.

இது குறித்து நாய்க்கு பயிற்சி கொடுத்த சூ லியாங், “சிறு வயதில் பூனை, உணவை எடுத்துச் சென்று விடக் கூடாது என்பதற்காக ஃபான்டுவானுக்கு பயிற்சி கொடுத்தேன். ஒரு நாள், என் மகள் வீட்டுப் பாடங்களை செய்யும்போது, குறும்புத்தனம் செய்வதைப் பார்த்தேன். அப்போதுதான் ஃபான்டுவானை மேற்பார்வையிட வைக்கலாம் என்ற ஐடியா வந்தது” என்கிறார். 

லியாங்கின் மகள் ஸின்யா, “உண்மையில் ஃபான்டுவான் இருப்பதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. நான் தனியாக வீட்டுப் பாடம் செய்து கொண்டிருக்கும்போது ஃபான்டுவான் பக்கத்தில் இருந்தால் எனக்கு சலிப்படிக்காது. நானும் கவனம் சிதறாமல் இருப்பேன். ஒரு நண்பன் உடனிருப்பது போலத்தான் இருக்கும்” என நெகிழ்கிறார். 

Click for more trending news


.