முள்ளம்பன்றிக்கும் சிறுத்தைக்கும் சண்டை - ஜெயிச்சது யாரு? - வீடியோவைப் பாருங்க

இதுவரை இந்த வீடியோவுக்கு 44,000 பார்வைகள் கிடைத்துள்ளன. 3,600 லைக்ஸ்களுக்கு மேல் அள்ளியுள்ளது. பல கருத்துகளும் வந்துள்ளன.

முள்ளம்பன்றிக்கும் சிறுத்தைக்கும் சண்டை - ஜெயிச்சது யாரு? - வீடியோவைப் பாருங்க

இந்திய வனத் துறை அதிகாரி ரமேஷ் பாண்டே, தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்தான வீடீயோவைப் பகிர்ந்துள்ளார்.

சிறுத்தை, பல மிருகங்களை வேட்டையாடும் காணொலிகளைப் பார்த்திருப்போம். ஆனால், முள்ளம்பன்றி போல உயிரினத்துடன் அது எப்படி சண்டையிடுகிறது என்பதை எளிதாகப் பார்த்துவிட முடியாது. ஆனால், அது குறித்தான காணக்கிடைக்காத ஒரு வீடியோ தற்போது கிடைத்துள்ளது. இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய வனத் துறை அதிகாரி ரமேஷ் பாண்டே, தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்தான வீடீயோவைப் பகிர்ந்துள்ளார். உத்தர பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அவர் சொல்கிறார். வீடியோவில் ஒரு இளவயது சிறுத்தையும் முள்ளம்பன்றியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்கின்றன. சிறுத்தை, பன்றியை ஒரு இரையாகப் பார்க்கிறது. ஆனால், முள்ளம்பன்றியோ சாமர்த்தியமாக தன் முதுகில் உள்ள முட்களை வைத்து சிறுத்தையிடமிருந்து தப்பிக்கிறது. உத்தர பிரதேசத்தின் கடார்நியாகாட் வனவிலங்கு சரணாலயத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 

Earth Touch செய்தி நிறுவனம் கொடுக்கும் தகவல்படி, முள்ளம்பன்றிகளுக்கும் சிறுத்தைகளுக்கும் இடையில் நடக்கும் வாழ்க்கைச் சண்டைகளில் சிறுத்தையே பல முறை வெற்றி பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், இந்த வீடியோவைப் பொறுத்தவரை சிறுத்தை, இளவயதுடையது. அதனால், அதன் வெற்றி வாய்ப்புத் தட்டிப் பறிக்கப்பட்டதாக சொல்கிறார் அதிகாரி பாண்டே. 

இதுவரை இந்த வீடியோவுக்கு 44,000 பார்வைகள் கிடைத்துள்ளன. 3,600 லைக்ஸ்களுக்கு மேல் அள்ளியுள்ளது. பல கருத்துகளும் வந்துள்ளன. 

Click for more trending news