கணினி இல்லாத ஒரு பள்ளி மாணவர் சமீபத்தில் எலக்ட்ரானிக் கடையில் உள்ள டேப்பை பயன்படுத்தி வீட்டுப்பாடத்தை முடிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ பிரேசிலில் உள்ள ரெசிஃபி என்னும் வணிக வளாகத்தில் எடுக்கப்பட்டது. இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்ட பின் வைரலாகியது. அங்கு சுமார் 12.5 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.
வீடியோவில், சிறுவன் கழுத்தை சாய்த்துக் கொண்டு பள்ளிப் பையுடன் எலக்ட்ரானிக் கடைக்குள் நிற்கிறான். குறிப்புகளை எடுக்க டிஸ்ப்ளேவில் வைக்கப்பட்ட சாம்சங் டேப்பை பயன்படுத்துகிறான்.
கீழே உள்ள வைரல் வீடியோவில் இதை பார்க்கலாம்:
இந்த வீடியோ கடந்த வாரம் ட்விட்டரில் பகிரப்பட்டதிலிருந்து 1.6 லட்சத்திற்கும் அதிகமான ரீ-ட்விட்களையும் ஆயிரக்கணக்கில் கமெண்டுகளையும் பெற்றது. வீடியோவில் வரும் சிறுவனுக்கு 3 டேப் பரிசாக கிடைத்துள்ளது.
கமெண்டில் பலரும் சிறுவனை வீட்டுப்பாடம் செய்ய அனுமதித்த ஊழியரின் மனிதாபிமானத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். சிறுவன் படிக்கும் நகராட்சி பள்ளியில் 278 மாணவர்களுக்கு 12 டேப் மட்டுமே உள்ளது. பலரும் பள்ளி நிர்வாக முறையை கடுமையாக சாடியுள்ளனர்.