This Article is From Jun 03, 2020

வெட்டுக்கிளி படையெடுப்பைத் தடுக்க உருவாக்கப்பட்ட ‘உள்ளூர் ஆயுதம்’… செம வைரல் வீடியோ!!

இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள் மூலம் மனிதர்களுக்கோ, கால்நடைகளுக்கோ எதுவம் ஆகாது. ஆனால், விளை நிலங்கள் மொத்தமாய் பாழாகிவிடும். 

வெட்டுக்கிளி படையெடுப்பைத் தடுக்க உருவாக்கப்பட்ட ‘உள்ளூர் ஆயுதம்’… செம வைரல் வீடியோ!!

டிக் டாக் தளத்தில் மட்டும் இந்த வீடியோவுக்கு 2.7 கோடி வியூஸ் கிடைத்துள்ளன. இன்னும் வியூஸ் வந்து கொண்டே இருக்கின்றன. 

வட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸைவிட மிகப் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. பயிர் உண்ணும் இந்த வெட்டுக்கிளிகள், பசுமையான ஒரு கிராமத்திற்குள்ளோ ஊருக்குள்ளோ நுழைந்தால் அந்த இடத்தை சூரையாடிவிடும் என்று சொல்லப்படுகிறது. இதைத் தடுக்கப் பல்வேறு யோசனைகளை சொல்லி வருகிறது அரசு தரப்பு. குறிப்பாக, இந்த வெட்டுக் கிளிகள் வரும்போது மிக அதிக சத்தம் எழுப்பினால் அவை அரண்டு ஓடிவிடும் என்று தெரிவிக்கிறது அரசு. பல விவசாய நிலங்களைப் பாதுகாக்க அரசே, சத்தம் எழுப்பும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. 

விவசாயிகளும் தங்கள் பங்கிற்குக் கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து சத்தம் எழுப்பி வருகிறார்கள். இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில் வெட்டுக்கிளிகளை விரட்டியடிக்க ஒரு ‘வாவ்' போடவைக்கும் கண்டுபிடிப்பு குறித்தான வீடியோ படுவைரலாக மாறியுள்ளது. 

உத்தர பிரதேச மாநிலத்தின் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்பி ராகுல் ஸ்ரீவஸ்தவா, தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த ‘அரியவகை' கண்டுபிடிப்பு குறித்தான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 

வீடியோவில், விவசாய நிலத்திற்கு நடுவில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு பெரிய கொம்பின் உச்சியில் விமானம் போன்ற ஒரு அமைப்பு உள்ளது. காலியான பிளாஸ்டிக் பாட்டிலை கொம்பில் தட்டையாக குத்தப்பட்டு அதன் ஒரு பக்கம் பழைய மின்சார விசிறியின் இறக்கைகள் சொருகப்பட்டுள்ளன. பாட்டிலின் இன்னொரு பக்கம், ஒரு சிறிய டின் வகையிலான பாத்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இப்போது இறக்கைகள் சுற்ற பாட்டிலின் நடுவில் உள்ள கம்பியும் சுற்றுகிறது. இதனால் கம்பியின் மறு முனையில் இருக்கும் இறும்புத் தகடு, டின் மீது ‘டப டப' என அடித்து சத்தம் போடுகிறது. காற்று வேகமாக அடிக்க அடிக்க, சத்தம் உக்கிரமாகிறது. இந்த சத்தத்தினால் வெட்டுக்கிளிகள் அருகில் வராது எனப்படுகிறது. 

வீடியோவைப் பார்க்க:

வீடியோவுக்கு ட்விட்டரில் பலரும் புகழாரம் சூட்டி வருகிறார்கள்.

டிக் டாக் தளத்தில் மட்டும் இந்த வீடியோவுக்கு 2.7 கோடி வியூஸ் கிடைத்துள்ளன. இன்னும் வியூஸ் வந்து கொண்டே இருக்கின்றன. 

இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள் மூலம் மனிதர்களுக்கோ, கால்நடைகளுக்கோ எதுவம் ஆகாது. ஆனால், விளை நிலங்கள் மொத்தமாய் பாழாகிவிடும். 

Click for more trending news


.