This Article is From Jul 23, 2020

கொழுந்துவிட்டு எரிந்த வீடு… 3வது மாடியிலிருந்து குதித்த சிறுவர்கள்… திக் திக் வீடியோ!

இந்த சம்பவம் தொடர்பாக நகர நிர்வாகம் விசாரணை செய்து வருகிறது. 

கொழுந்துவிட்டு எரிந்த வீடு… 3வது மாடியிலிருந்து குதித்த சிறுவர்கள்… திக் திக் வீடியோ!

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக குழந்தைகளுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், இரண்டு சிறுவர்கள், தங்கள் உயிர்களைக் காக்க எடுத்த முயற்சிப் பலரை திடுக்கிட வைத்துள்ளது. 

பிரான்ஸ் நாட்டின் கிரனோபல் என்னும் நகரத்தில் இந்த சம்பவம் இந்த வாரத் தொடக்கத்தில் நடந்துள்ளதாக டெய்லி மெயில் செய்தி நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது. 

வீடியோவில் ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் மூன்றாவது மாடியில் தீ பிடித்துள்ளது தெரிகிறது. திடீரென்று அந்த மாடியின் வெளியே ஒரு சிறிய குழந்தை குதிக்கப் பார்க்கிறது. அந்தக் குழந்தையைப் பிடிக்க மக்கள் கீழே கூடுகின்றனர். தொடர்ந்து இன்னொரு சிறுவன் மேலே இருந்து குதிக்கிறான். அவனையும் அந்தக் குழு பிடிக்கிறது. என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் முன்னரே காணொலி முடிந்துவிடுகிறது. 

சிடிவி செய்தி நிறுவனம் அளிக்கும் தகவல்படி, கட்டடத்திலிருந்து குதித்த குழந்தைகளுக்கு முறையே 3 மற்றும் 10 வயது ஆகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பெற்றோர்கள் வீட்டில் இருவரையும் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். இந்த நேரத்தில் வீட்டிற்குள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தீ கொழுந்துவிட்டு எரியவே, என்ன செய்வது என்று தெரியாமல் இரு குழந்தைகளும் திகைத்துள்ளன. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், இருவரும் ஜன்னல் வழியாக கீழே குதிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். முதலில் 10 வயதுக் குழந்தை தன் தம்பியை கீழே போட்டுவிட்டு, பின்னர் அவனும் குதித்துள்ளான். 

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக குழந்தைகளுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. ஆனால், குழந்தைகளை பத்திரமாக மீட்க கீழே நின்றிருந்த இளைஞர் ஒருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கும் தீ விபத்தினால் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக நகர நிர்வாகம் விசாரணை செய்து வருகிறது. 

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், “இரு குழந்தைகளும் கத்துவதை நான் பார்த்தேன். மூன்றாவது மாடி ஜன்னல் பக்கம் வந்து இருவரும் கதறினார்கள். தீ விபத்தினால் மிகுந்த கறும்புகை, வெடிப்புகள் நிகழ்ந்தன. இரு குழந்தைகளும் மிகவும் அச்சத்தில் இருந்தன. இருவரும் அழுதனர்” என்கிறார். 

கிரனோபல் நகர மேயர், சாதுர்யமாக யோசித்துக் குழந்தைகளை பத்திரமாக மீட்ட மக்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். 

Click for more trending news


.