‘எவ்ளோ அழகு..!’- பிறந்த யானைக் குட்டி எடுக்கும் முதல் அடி… கியூட் வைரல் வீடியோ!

Viral Video - "ஒரு நாள் இந்த யானை 6,000 கிலோ எடை கொண்ட மாபெரும் மிருகமாக மாறும்."

‘எவ்ளோ அழகு..!’- பிறந்த யானைக் குட்டி எடுக்கும் முதல் அடி… கியூட் வைரல் வீடியோ!

Viral Video - “ஒரு யானையை நடக்க வைக்க அதன் தாய் அதிக மெனக்கிடும். ஒரு யானைக் குடும்பத்தில் பிறப்புதான் மிக முக்கியமான விஷயமாகும்”

New Delhi:

எந்த ஒரு பாலூட்டி இனத்துக்கும் பிறந்தவுடன் நடப்பது என்பது மிகப் பெரிய சவால்தான். பிறந்த குழந்தைகள் சில மாதத்திற்குப் பின்னர் தட்டித் தட்டி நடக்கும் அழகைப் பார்த்து பலரும் ரசித்திருப்போம். அப்படி, யானைக் குட்டி ஒன்று தனது முதல் அடியை எடுத்துவைக்க எடுக்கும் முயற்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவின் கியூட்னஸுக்காக பலரும் அதை ‘வாவ்' போட்டுப் பாராட்டி வருகின்றனர். 

இந்திய வனத் துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் மூலம், இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. “புதிதாகப் பிறந்த யானைக் குட்டியின் முதல் சில அடிகள். பொறுமையாகவும் ஸ்திரமற்றதாகவும் இருக்கும். ஒரு நாள் இந்த யானை 6,000 கிலோ எடை கொண்ட மாபெரும் மிருகமாக மாறும். அப்போது அது எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் பூமி அதிரும். அதுதான் வாழ்க்கை,” என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவிட்டுப் பகிர்ந்துள்ளார் கஸ்வான்

.

இன்னொரு போஸ்ட்டில் அவர், “ஒரு யானையை நடக்க வைக்க அதன் தாய் அதிக மெனக்கெடும். ஒரு யானைக் குடும்பத்தில் பிறப்புதான் மிக முக்கியமான விஷயமாகும்,” என்கிறார். 

வீடியோவில் யானைக் குட்டி, தடுக்கித் தடுக்கி முதல் சில அடிகளை எடுத்து வைப்பது தெரிகிறது. அதற்கு அதன் தாய் பக்கத்திலேயே இருந்து உதவி செய்கிறது. தன் தும்பிக்கை மூலம் தாய் யானை, குட்டிக்கு உறுதுணையாக இருக்கிறது. 

பலரும் இந்த கியூட் வீடியோவைப் பார்த்து ‘வாவ்' போட்டு வருகின்றனர். 

“யானைகளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளத் தெரிந்துகொள்ள, அவற்றின் சிறப்பு குறித்து மேலும் அறிந்து சிலிர்த்துப் போகிறேன். யானையை நான் காதலிக்கிறேன். அவற்றின் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளேன்,” என்று நெகிழ்ச்சியோடு கருத்திடுகிறார் ஒரு ட்விட்டர் பயனர். 

Newsbeep

“ரொம்ப ஆச்சரியமாக உள்ளது. இதைப் போன்ற ஒரு காட்சியை ஜங்கிள் புக் படங்களில் பார்த்துள்ளேன். உண்மைக் காட்சி பிரமிக்க வைக்கிறது,” என்கிறார் இன்னொருவர். 

“இப்போதுள்ள அம்மாக்கள், தங்கள் குழந்தைகளை எப்படி நடக்க வைப்பது என்பதை யூடியூப் மூலம் பார்த்துத் தெரிந்து கொள்கிறார்கள். ஆனால், இது அவ்வளவு கற்றுக் கொடுக்கிறது,” என்று பதிவிடுகிறார் வேறொருவர். 

 
 

Click for more trending news