பாம்பை பிடித்து பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரே கொத்து..! - அலறவைக்கும் வைரல் வீடியோ!!

பல லட்சம் லைக்ஸ்களைப் பெற்றுள்ள இந்த வீடியோவுக்குக் கீழ் பலரும் கமென்ட் செய்து வருகின்றனர். 

பாம்பை பிடித்து பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரே கொத்து..! - அலறவைக்கும் வைரல் வீடியோ!!

திடீரென்று வீடியோ வெட்டுப்படுகிறது...

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல வன உயிர் வல்லுநர் 16 வயதான ராபர்ட் இர்வின். இவர் வன விலங்குகள் வல்லுநராக திகழ்ந்த ஸ்டீவ் இர்வினின் மகன் ஆவார். தன் தந்தையைப் போலவே காட்டுயிர்களுடன் உறவாடி வருகிறார் ராபர்ட். அப்படி அவர் சமீபத்தில் ஒரு பாம்பு கொண்டு எடுத்த வீடியோவில், ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்தது. வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் போதே பாம்பு, ராபர்ட்டின் முகத்திலேயே கொத்தி விடுகிறது. பார்ப்பதற்கு பதற்றத்தை ஏற்படுத்தும் இந்த வீடியோவில் ராபர்ட்டுக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. ஆனால், இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இதைப் போலவே அவரின் தந்தை ஸ்டீவ் இர்வினையும் ஒரு பாம்பு முகத்திலேயே கொத்தியுள்ளது. இரண்டு சம்பவங்களின் வீடியோக்களையும் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராபர்ட். அதுதான் தற்போது வைரலாகி வருகிறது. 

வீடியோவில் ராபர்ட், ஒரு கார்பெட் பைத்தான் என்னும் பாம்பை, ஒரு பையிலிருந்து எடுக்கிறார். அப்போது அவர், “நீ நல்ல பிள்ளையாக இருக்கப் போகிறாயா அல்லது குறும்பத்தனம் காட்டப் போகிறாயா?” என சொல்லிக் கொண்டே பாம்பின் வாலைப் பிடித்து உருவுகிறார். தொடர்ந்து அவர், “இந்தப் பாம்புகள் மிக அழகானவை. எனக்கு கார்பட் பைத்தான்களை மிகவும் பிடிக்கும். இது நல்ல வளர்ச்சியடைந்த பைத்தான் பாம்பு. நான் இந்தப் பாம்பை முதலில் கண்டெடுத்தபோது…” என சொல்லிக் கொண்டிருக்கும்போதே, முகத்தில் ஒரு கொத்து வைக்கிறது பாம்பு. ‘அனிமல் பிளேனட்' தொலைக்காட்சிக்காக வீடியோ எடுக்கும் போது இச்சம்பவம் நடந்துள்ளது.  

திடீரென்று வீடியோ வெட்டுப்படுகிறது. ஸ்டீவ் இர்வின் தோன்றும் ‘தி க்ரோக்கடைல் ஹன்டர்' நிகழ்ச்சியின் வீடியோ ஒளிபரப்பாகிறது. அவரும் ராபர்ட்டைப் போல பேசிக் கொண்டிருக்கும் போதே, கார்பட் பைத்தான் வகைப் பாம்பு முகத்திலேயே கொத்து வைக்கிறது. இப்படி இரண்டு வீடியோக்களையும் பகிர்ந்தது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வீடியோவுடன், இருவர் முகத்திலும் பாம்புகளால் ஏற்பட்ட ரத்தம் வடிந்த காயங்கள் குறித்தப் படங்களையும் பகிர்ந்துள்ளார் ராபர்ட். 

பல லட்சம் லைக்ஸ்களைப் பெற்றுள்ள இந்த வீடியோவுக்குக் கீழ் பலரும் கமென்ட் செய்து வருகின்றனர். 

ஒருவர், “அப்பாவைப் போலவே பிள்ளை” என கிண்டல் செய்கிறார். 

இன்னொருவரோ, “உங்கள் தந்தையைப் போலவே இருக்கிறீர்கள். அவர் உங்களைப் பார்த்தால் பெருமையடைவார்” எனப் புகழாரம் சூட்டியுள்ளார். 


 

Click for more trending news