தெருவில் அனாமத்தாக நடமாடிய ‘சிங்கம்’- அலறியடித்து ஸ்பாட்டுக்குப் போன போலீஸ்… கடைசியில ஒரு ட்விஸ்டு!!

வினோதமான தோற்றம் கொண்ட அந்த நாயை, அதன் உரிமையாளருடன் போலீஸார் சேர்த்துவிட்டதாகத் தெரிகிறது.

தெருவில் அனாமத்தாக நடமாடிய ‘சிங்கம்’- அலறியடித்து ஸ்பாட்டுக்குப் போன போலீஸ்… கடைசியில ஒரு ட்விஸ்டு!!

எதற்கு ஒரு நாய்க்கு இப்படி வினோதமான முறையில் முடித் திருத்தம் செய்யப்பட்டது என்பது குறித்து போலீஸுக்குத் தெரியவில்லை

ஸ்பெயின் நாட்டில் உள்ள மோலினா டி செகுரா என்னும் ஊரில், ஒரு சிங்கம் தெருவில் நடமாடி வருவதாக அங்குள்ள உள்ளூர் போலீஸுக்குத் தொடர் புகார்கள் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ், சிங்கத்தைப் பிடிக்கத் தேடுதல் வேட்டையில் இறங்கியது. தெருத் தெருவாகச் சிங்கத்தைத் தேடி, இறுதியில் அதைக் கண்டுபிடித்துள்ளனர் போலீஸ். ஆனால், அருகில் சென்று பார்த்தால் அது சிங்கமே இல்லையாம்…. நாய்தான் சிங்கம் போல நடமாடி பலரை அச்சுறுத்தியுள்ளது. இது குறித்து மோலினா டி செகுரா போலீஸ், ட்விட்டரில் வேடிக்கையான பதிவை இட்டுள்ளனர். சில நாட்களாக இந்த சம்பவம் குறித்த ட்வீட் படுவைரலாக உள்ளது. 

தெருத் தெருவாக ‘சிங்கத்தைத்' தேடி அலைந்தபோது போலீஸ் இறுதியில் பார்த்தது, வினோதமான முறையில் வெட்டப்பட்டிருந்த முடியுடன் இருந்த நாயைத்தான். ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால், அப்படியே சிங்கத்தைப் போலவே காட்சி தருகிறது அந்த நாய்.

இது குறித்து மோலினா டி செகுரா போலீஸ், தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நம் ஊரின் கார்டன் பகுதியில் சிங்கம் உலவுவதாக எங்களுக்குப் பல புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதனால், புகார்களில் உண்மையுள்ளதா என்று தேடிச் சென்று சிங்கத்தைப் பார்த்தால்… அது நாய்” என்று கிண்டல் தொனியில் ட்வீட்டியுள்ளது. 

இந்த ட்வீட்டுக்குப் பலரும் நகைப்புடன் ரிப்ளை செய்து வருகின்றனர். 

வினோதமான தோற்றம் கொண்ட அந்த நாயை, அதன் உரிமையாளருடன் போலீஸார் சேர்த்துவிட்டதாகத் தெரிகிறது. 

அதே நேரத்தில், எதற்கு ஒரு நாய்க்கு இப்படி வினோதமான முறையில் முடித் திருத்தம் செய்யப்பட்டது என்பது குறித்து போலீஸுக்குத் தெரியவில்லை. அது குறித்துத் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. தற்போதைக்கு நாய் பத்திரமாக இருப்பதாக போலீஸ், தகவல் தெரிவித்துள்ளது. 

Click for more trending news