இந்தப் படத்தில ஒரேயொரு பாம்பு இருக்கு..! - முடிஞ்சா கண்டுபிடிங்க பார்க்கலாம்!!

நிறைய பேர் பல மணி நேரம் இந்தக் குழப்பமான படத்தைப் பார்த்துப் பாம்பைக் கண்டுபிடிக்காமல் துவண்டு போயினர்.

இந்தப் படத்தில ஒரேயொரு பாம்பு இருக்கு..! - முடிஞ்சா கண்டுபிடிங்க பார்க்கலாம்!!

“அப்பா… நான் கண்டுபிடிச்சுட்டேன். இது மிகக் கடினமாக இருந்தது,” என்று வெற்றிக் களிப்பில் ஒருவர் இன்ஸ்டாவில் பதிவிட,

‘உங்கள் வீட்டில் ஒரு பாம்பு இருக்கிறது. அதை கண்டுபிடிங்கள்' என்று யாராவது சொன்னால் பயத்தில் என்ன செய்வது என்றே புரியாது. அதே நேரத்தில் ஒரு படத்தில் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது, அதை முடிந்தால் கண்டுபிடியுங்கள் என்று சொன்னால்… அதில் வெற்றியடைவதன் மூலம் ஒரு அலாதியான இன்பம் வருவதைத் தவிர்க்க முடியாது. 

சிறுவர்களுக்காகப் புத்தகங்கள் எழுதும் கெர்கலி டுடாஸ், சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வண்ணம் தீட்டிய படத்தைப் பகிர்ந்து, ஒரு சவாலையும் விட்டுள்ளார். 

பச்சைப் பசேல் என்றும் மஞ்சள் நிறத்திலும் படம் முழுவதும் டுடாஸ் பகிர்ந்துள்ள படத்தில் விரவிக் கிடக்கின்றன இலைகள். படத்தின் இரு பக்கங்களிலும் மரத் தண்டுகள். தண்டுகளிலிருந்து குறுக்கே வெட்டிச் செல்கின்றன மரக் கிளைகள். அதிலிருந்து தொங்குகின்றன பாம்பு போன்ற நீண்ட கொடிகள். இவை அத்தனைக்கும் நடுவில் கொக்குப் போன்று எட்டிப் பார்க்கும் பறவைகள். இப்படியொரு பெரும் களேபரத்துக்கு நடுவில் ஒரு இடத்தில் பாம்பையும் மறைத்து வைத்துள்ளார் டுடாஸ். 

படத்தைப் பார்க்க:

பல்லாயிரம் லைக்ஸ்களை குவித்துள்ள இந்தப் படம் பல நெட்டிசன்களின் தூக்கத்தையும் பறித்துள்ளது. 

“அப்பா… நான் கண்டுபிடிச்சுட்டேன். இது மிகக் கடினமாக இருந்தது,” என்று வெற்றிக் களிப்பில் ஒருவர் இன்ஸ்டாவில் பதிவிட, 

“மிக மிக கஷ்டமான பசில்” என்று பெரு மூச்சுவிடுகிறார் இன்னொருவர்.

நிறைய பேர் பல மணி நேரம் இந்தக் குழப்பமான படத்தைப் பார்த்துப் பாம்பைக் கண்டுபிடிக்காமல் துவண்டு போயினர். “எவ்ளோ நேரம் பார்த்தாலும் இதில் இருக்கும் படத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை,” என்றார்.
 

Click for more trending news