This Article is From May 21, 2020

ஒரு குட்டித் தவளைக்கும் சிறுத்தைக்கும் சண்டை… ஜெயிச்சது யாரு தெரியுமா..?

சிலரோ, மிருகங்களுக்கு இடையில் சண்டை என வரும்போது, அளவு முக்கியமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் வீடியோ பதிவிட்டனர். 

ஒரு குட்டித் தவளைக்கும் சிறுத்தைக்கும் சண்டை… ஜெயிச்சது யாரு தெரியுமா..?

நேஷனல் ஜியோகிராஃபிக் அளிக்கும் தகவல்படி, தன் இரையை அடித்து உண்ணும் முன்னர் ஒரு சிறுத்தையானது, அதனுடன் விளையாடும் என்று தகவல் தெரிவிக்கிறது. 

சமூக வலைதளங்களில் சில நேரங்களில் வைரலாகும் வீடியோக்கள் நம்மை ஒரு நிமிடம் திக்குமுக்காட வைத்துவிடும். அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது படுவைரலாக மாறி வருகிறது. வீடியோவில் ஒரு சிறுத்தைக்கும் குட்டித் தவளைக்கும் சண்டை மூள்கிறது. ஆனால், இறுதியில் தவளை வெற்றி வாகை சூடி பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

இந்திய வனத் துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவரால், ட்விட்டரில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவர், “காலங்கள் மாறி வருகின்றன. தவளைக்கும் சிறுத்தைக்கும் இடையில் நடந்த நம்ப முடியாத சண்டை. இறுதியில் யார் வென்றது என்பதைப் பாருங்கள்,” என்று வீடியோவோடு கருத்திட்டுள்ளார். 

வீடியோவைப் பார்க்க:

வீடியோவில், சிறுத்தை ஒன்று, அப்பாவியாக இருக்கும் பச்சை நிறத் தவளையைச் சீண்டுகிறது. முதலில் சற்று மிரட்சியடைந்ததாக இருக்கும் தவளை, ஒரு கட்டத்தில் ‘திருப்பி அடி' என்கிற வழிமுறையைக் கையிலெடுக்கிறது. ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்று சிறுத்தை தன் கூர்மையான நகங்களால் தவளையை மீண்டும் மீண்டம் சீறுகிறது. அதற்கு குபுக் குபுக்கென்று குதித்துத் தன் எதிர்ப்பைப் பதிவு செய்கிறது தவளை. ‘நின்னு சண்ட செய்வேன்' என்பது போல தவளை பார்க்கவே, வேறு வழியில்லாமல் பின் வாங்குகிறது சிறுத்தை. 

வீடியோ ஆன்லைனில் போஸ்ட் செய்யப்பட்டதிலிருந்து பல்லாயிரம் பார்வைகளைப் பெற்று வருகிறது. பலரும் ஆச்சரியத்தில் கருத்திட்டு வருகிறார்கள். சிறுத்தையின் இந்த விசித்திர ரியாக்‌ஷனுக்குக் காரணம் என்னவென்பது குறித்தும் விவாதிக்க ஆரம்பித்தனர். 
 
சிலரோ, மிருகங்களுக்கு இடையில் சண்டை என வரும்போது, அளவு முக்கியமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் வீடியோ பதிவிட்டனர். 

நேஷனல் ஜியோகிராஃபிக் அளிக்கும் தகவல்படி, தன் இரையை அடித்து உண்ணும் முன்னர் ஒரு சிறுத்தையானது, அதனுடன் விளையாடும் என்று தகவல் தெரிவிக்கிறது. 

Click for more trending news

.