ஆதிக்கத்தை நிலைநாட்ட இரு புலிகளின் ‘காட்டுச் சண்டை’… அலறவைக்கும் வைரல் வீடியோ!

இந்த வீடியோ பல்லாயிரம் முறை பார்க்கப்பட்டுள்ள நிலையில், காணொலிக்குக் கீழ் பலரும் அதிர்ச்சி கமென்டுகளை இட்டு வருகின்றனர். 

ஆதிக்கத்தை நிலைநாட்ட இரு புலிகளின் ‘காட்டுச் சண்டை’… அலறவைக்கும் வைரல் வீடியோ!

ஒருவர், “இந்த சண்டையின் முதல் 10 நொடிகள் மிக மூர்க்கமாக உள்ளது” என்கிறார்.

மிக மூர்க்கமான வன விலங்குகள் பட்டியலில் புலிகள் உச்சத்தில் இருக்கும். மிகப் பிரமாண்டமான உருவம், ஆக்ரோஷமான குணம், பயப்படாத சுபாவம், வலுவான உடல், கூர்மையான பற்கள் என புலியின் ஒவ்வொரு விஷயமும் கிரங்கடிக்கும் வகையில்தான் இருக்கும். புலிகள், இரைக்காக வேட்டையில் ஈடுபடுவதைவிட மூர்க்கனதமாக இருக்கும் இரு புலிகளின் சண்டை. புலிகள் பொதுவாக, தங்கள் இருப்பிடத்தை நிலைநாட்ட இப்படி சண்டையிட்டுக் கொள்வது வழக்கம். பெரும்பாலும் ஆண் புலிகளுக்கு இடையில் இப்படியான சண்டைகள் நடக்கும். 

அப்படி காதைப் பிளக்கும் கர்ஜனையுடன் இரு புலிகள் இடும் சண்டையின் வீடியோ தற்போது ட்விட்டர் தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எடுக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், பல்வேறு சமயங்களில் இது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் டிரெண்டாகி வருகிறது. யூடியூபில் முதன்முதலாக பதிவேற்றப்பட்ட இந்த காணொலிக்கு 70 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளது. 

தற்போது இந்த வீடியோவை, இந்திய வனத் துறை அதிகாரி சுதா ராமன் பகிர்ந்துள்ளார். வீடியோவுடன் அவர், “புலிகள் சண்டையிட்டுப் பார்த்திருக்கிறீர்களா. மல்யுத்தத்திற்கு சற்றும் குறைவில்லாத வகையில் இவை இருக்கும். இதைப் போன்ற சண்டைகள் மூலம் மட்டும்தான் ஆதிக்கம் நிலைநாட்டப்படும். இந்த சண்டையில் வெற்றி பெரும் புலிக்கே வாழ்விடம் கிடைக்கும். அதிர்ஷ்டம் இருந்தால் பெண் புலியும் கிடைக்கும். தோல்வியடைந்த புலியானது, அந்த இடத்திலிருந்து வேறொரு இடத்துக்குச் சென்று புதிய வாழ்விடத்தைத் தேட வேண்டும்,” எனப் பதிவிட்டுள்ளார். 

வீடியோவைப் பார்க்க:
 

இந்த வீடியோ பல்லாயிரம் முறை பார்க்கப்பட்டுள்ள நிலையில், காணொலிக்குக் கீழ் பலரும் அதிர்ச்சி கமென்டுகளை இட்டு வருகின்றனர். 

ஒருவர், “இந்த சண்டையின் முதல் 10 நொடிகள் மிக மூர்க்கமாக உள்ளது” என்கிறார்.

“புலிகள் பிராண்டும்போது எழும் ஒலிகளைக் கேட்கவே முடியவில்லை” என அதிர்ச்சியடைந்துள்ளார் இன்னொருவர். இந்த வீடியோ, ஹெலன் வாட்கின்ஸ் புலிகள் சரணாலயம் மற்றும் சஃபாரி (Helena Watkins at the Tiger Canyon wildlife and safari) என்னும் இடத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

Click for more trending news