This Article is From Jul 25, 2020

ஒரே நாளில் உலக வைரலான 85 வயது ‘சிலம்பம் பாட்டி’… அடுத்த வீடியோ!

அவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், சாந்தாபாயின் காணொலி, தங்களுக்கு நிறைய உதவிகள் கிடைக்கச் செய்துள்ளதாக மகிழ்ச்சித் தகவல் கொடுத்துள்ளார். 

ஒரே நாளில் உலக வைரலான 85 வயது ‘சிலம்பம் பாட்டி’… அடுத்த வீடியோ!

தனது 8 வயதிலிருந்து இந்த கொம்பு சுற்றும் தற்காப்புக் கலையைப் பயின்று வருவதாக சொல்லும் சாந்தாபாய், அதைச் செய்து காட்ட பல இடங்களுக்குப் பயணப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

ஹைலைட்ஸ்

  • சில நாட்களுக்கு முன்னர் மூதாட்டியின் வீடியோ வைரலானது
  • புனேவைச் சேர்ந்தவர் இந்த 85 வயது மூதாட்டி
  • அவரின் பெயர் சாந்தாபாய் பவார் ஆகும்
Pune:

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர், தன் கொம்பு சுற்றும் வித்தைக்காக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். கொரோனா வைரஸ் பரவல் காலக்கட்டத்தில் தன் அன்றாட செலவுகளுக்காக அவர் இப்படி சாலைகளிலும் தெருக்களிலும் வித்தைக் காட்டி வருகிறார். இதைத் தொடர்ந்து அவருக்கு உதவிகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. 

சாந்தாபாய் பவார் என்னும் அந்த மூதாட்டி, இரண்டு கைகளில் சிறிய கொம்புகளை வைத்துச் சுற்றி வித்தைக் காட்டும் வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்னர் பல சமூக வலைதளங்களில் வைரலானது. குறிப்பாக பல பாலிவுட் பிரபலங்கள் அவரின் வீடியோவைப் பகிர்ந்து, அவரை தொடர்பு கொள்ள விவரங்களையும் கேட்டிருந்தனர். 

சாந்தாபாய் பவார், சில ஆதரவற்றக் குழந்தைகளையும் பராமரித்து வருகிறார். அவர்களின் அன்றாடத் தேவைகளுக்கும் சேர்த்தே அவர் வித்தைக் காட்டி வருகிறார். 

அவரின் புதிய வீடியோ இதோ:

தனது 8 வயதிலிருந்து இந்த கொம்பு சுற்றும் தற்காப்புக் கலையைப் பயின்று வருவதாக சொல்லும் சாந்தாபாய், அதைச் செய்து காட்ட பல இடங்களுக்குப் பயணப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். ஆனால், தற்போதைய கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் அப்படியான பயணங்கள் அமைவதில்லை என்றும், அதனால்தான் வீதிக்கு வந்து வித்தைக் காட்டத் தொடங்கியுள்ளதாகவும் குமுறுகிறார். 

“எனக்கான மளிகைப் பொருட்களை வாங்க முடிவதில்லை. பல சிறிய குழந்தைகளை உள்ளடிக்கிய மிகப் பெரிய குடும்பத்தில் அன்றாடச் செலவுகளுக்கு மிகவும் சிரமப்படுகிறோம். ஆகவேதான் சாலைக்கு வந்து எனது வித்தையை வெளிக்காட்டி வருகின்றனர். இப்படிச் செய்தால் மக்கள் எனக்குப் பணம் கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை” என்று வெளிப்படையாக பேசுகிறார் சாந்தாபாய்.

அவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், சாந்தாபாயின் காணொலி, தங்களுக்கு நிறைய உதவிகள் கிடைக்கச் செய்துள்ளதாக மகிழ்ச்சித் தகவல் கொடுத்துள்ளார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more trending news


.