This Article is From Dec 17, 2018

சந்தேகத்துக்குள்ளான 'வைன்' வீடியோ தளத்தின் நிறுவனர் க்ரோலின் மரணம்

34 வயதான அவரை மன்ஹத்தானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மயக்கமான நிலையில் இருந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகத்துக்குள்ளான 'வைன்' வீடியோ தளத்தின் நிறுவனர் க்ரோலின் மரணம்

க்ரோல் 2012ம் ஆண்டு 'வைன்' தளத்தை ஆரம்பித்தார்.

New York, United States:

அமெரிக்காவின் டெக் நிறுவனவனமான 'வைன்' நிறுவனத்தின் துணை நிறுவன‌ர் க்ரோல், நியூயார்க் நகரில் அதிகப்படியான மருந்துப்பொருட்களை உட்கொண்டதால் இறந்துள்ளார். 34 வயதான அவரை மன்ஹத்தானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மயக்கமான நிலையில் இருந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

அதிகப்படியான மருந்துப்பொருட்களை எடுத்துக் கொண்டதுதான் அவரது மரணத்துக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ள நிலையில், போலீஸ் விசாரணையை துவங்கியுள்ளது. க்ரோல் 2012ம் ஆண்டு 'வைன்' தளத்தை ஆரம்பித்தார். சிறிய கால அவகாசம் கொண்ட வீடியோக்களுக்கு பிரபலமான 'வைன்' ட்விட்டரால் வாங்கப்பட்டது. ஆனால் தற்போது இது பயன்பாட்டில் இல்லை.

செப்டம்பர் மாதம் ஹைக்யூ ட்ரைவியா எனும் ஆப் நிறுவனத்தின் சிஇஓவாக நியமிக்கப்பட்டார். இவரது மரணத்தை ஹைக்யூ ட்ரைவியா உறுதி செய்துள்ளது. 

இவரது இறப்பு ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக ஹைக்யூ ட்ரைவியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 2017ம் ஆண்டு துவங்கப்பட்ட ஹைக்யூ ட்ரைவியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 2 மில்லியனுக்கும் அதிகம். 

டைம் பத்திரிக்கையில் க்ரோல் பற்றி வந்துள்ள செய்தியில் ''அவர், ட்விட்டரிலிருந்து மோசமான நிர்வாகத்திறன் காரணமாக வெளியேற்றப்பட்டார்'' என்று கூறப்பட்டுள்ளது.

.