வைரல் வீடியோ: ஸ்ட்ரோலரை திருடிச் சென்ற பெண் குழந்தையை மறந்து சென்ற பரிதாபம்

இந்த சம்பவம் குறித்து சிபிஎஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் ஸ்ட்ரோலரை திருடிவிட்டு 6 நிமிடங்களுக்குப் பின் பெண்கள் மூவரும் திரும்பி வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
வைரல் வீடியோ: ஸ்ட்ரோலரை திருடிச் சென்ற பெண் குழந்தையை மறந்து சென்ற பரிதாபம்

மூன்று பெண்களில் இருவரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

அமெரிக்க நியூ ஜெர்சி உள்ள  பாம்பி பேபி என்னும் கடையில் குழந்தைகளுக்கான ஸ்ட்ரோலரை திருட முயற்சித்த பெண்  தன் குழந்தையை மறந்து விட்டு சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியுள்ளது. 

குழந்தைகளுக்கான பொருட்கள் உள்ள கடையில் மூன்று பெண்கள் திருட வந்துள்ளனர். இருவர் ஊழியரிடம் பேசி கவனத்தை திசை திருப்ப மூன்றாவது பெண் ஸ்ட்ரோலரை திருடிச் செல்கிறார்.  குழந்தையை மறந்து விட்டு வந்தது நினைவு வர மீண்டும் வரும்போது கடையின் நிர்வாகத்தினர் அவர்களை கைது செய்துள்ளனர். 

பெண் திருடும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து சிபிஎஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் ஸ்ட்ரோலரை திருடிவிட்டு  6 நிமிடங்களுக்குப் பின் பெண்கள் மூவரும் திரும்பி வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

கடை உரிமையாளர் என்லியோ ஒர்டேகா சிபிஎஸ் செய்திக்கு  கொடுத்த பேட்டியில் “ஒரு ஸ்ட்ரோலருக்காக  குழந்தையை விட்டுச் செல்வது கவலைக்கு உள்ளாக்குகிறது. நீங்கள் உங்கள் வாழ்க்கைக்காக திருடுகிறீர்கள். அது ஒரு தனிப்பட்ட பிரச்சினை, ஆனால் ஏதும் தெரியாத ஒரு குழந்தையை அழைத்து வந்தது என்னை மிகவும் பாதிக்கிறது. அதனால் தான் இந்த வீடியோவை  பகிர்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மூன்று பெண்களில் இருவரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................