
இந்த பாம்பு காடுகளில் உயிர்வாழ்வது மிகவும் கடினம் (Representative Image)
சுற்றுச்சூழல் ஆலோசகர்கள் இருவர் கடந்த மாதம் அமெரிக்காவின் நியூஜெர்சியில் அரிய இரண்டு தலை ராட்டல் வகை பாம்பினை கண்டுபிடித்துள்ளனர். பைன் பாரென்ஸில் தேவ் என்னுமிடத்தில் கண்டதாக ஏபிசி செய்தி தளம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் ஆலோசகர்கள் இருவரும் ஹெர்பெட்டாலஜிகல் அசோசியேட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இரட்டைத் தலை பாம்பிற்கு டபுள் தேவ் என்று பெயரிட முடிவு செய்தனர்.
இந்த பாம்பு மிகவும் தனித்துவமானது. இந்த பாம்பிற்கு முழுமையாக உருவான இரண்டு தலைகள் நான்கு நான்கு கண்கள் இரண்டு நாக்குகள் உள்ளன.
இந்த பாம்பு காடுகளில் உயிர்வாழ்வது மிகவும் கடினம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இரட்டை தலை பாம்பு 8 முதல் 10 அங்குலம் நீளம் கொண்டது. அரிய பாம்பை வைத்து ஆய்வு செய்ய அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர்.