This Article is From Oct 05, 2018

ஷூவில் மாட்டிக்கொண்ட டாய்லெட் பேப்பருடன் விமானத்தில் ஏறிய டிரம்ப்! - வைரலாகும் வீடியோ

ஷூவில் மாட்டிக்கொண்ட டாய்லெட் பேப்பருடன் விமானத்தில் ஏறிய டிரம்ப் வீடியோ நகைச்சுவையுடன் ஈர்க்கப்பட்டு வருகிறது.

ஷூவில் மாட்டிக்கொண்ட டாய்லெட் பேப்பருடன் விமானத்தில் ஏறிய டிரம்ப்! - வைரலாகும் வீடியோ

மினியாபோலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

கடந்த வியாழனன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது காலில் சிக்கியிருந்த டாய்லெட் பேப்பரை கவனிக்காமல் விமானம் ஒன்றில் ஏறுவது போன்ற வீடியோ காட்சிகள் தற்போது சமூகவளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் மினியாபோலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், விமான படிக்கட்டுளில் ஏறும் போது அவரது இடது கால் ஷூவில் டாய்லெட் பேப்பர் ஒன்று சிக்கியிருந்தது. அதனை கவனிக்காத டிரம்ப் டாய்லெட் பேப்பருடன் விமான படிக்கட்டில் ஏறினார், பின்னர் படிகட்டில் நின்றவாறு கீழே நின்றவர்களை நோக்கி கைக்காட்டினார்.

 

இதன் பின்னர் அவர் விமானத்திற்குள் சென்ற போது, அவர் காலில் இருந்த பேப்பர் தானாக விலகியது. இந்த காட்சிகளை விமானத்திற்கு கீழே இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவளைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

 

Click for more trending news


.