This Article is From Jun 10, 2019

கதுவா 8 வயது சிறுமி வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் தீர்ப்பு : 10 தகவல்கள்

குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை அல்லது அதிகமாக தூக்குத் தண்டனை கிடைக்கலாம் எனத் தெரிகிறது.

நீதிமன்ற விசாரணைகள் அனைத்தும் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது.

New Delhi: காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று பாந்தன்கோட் சிறப்பு நீது மன்றத்தில் வழங்கப்படவுள்ளது. இந்த கொடூரமான கொலை நாடு முழுவதும் கடும் போராட்டத்தை தூண்டியது. இந்த வழக்கில் 8 பேர் வழக்கில் சிக்கியுள்ளனர். குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை அல்லது அதிகமாக தூக்குத் தண்டனை கிடைக்கலாம் எனத் தெரிகிறது.

தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்

  1. ஜூன் 3ம் தேதி வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டது. மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தேஜ்வந்தர் சிங் இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த வழக்கு அதிகளவு போராட்டத்தை தூண்டியது என்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. 

  2. குற்றப்பத்திரிகையில், முஸ்லீம் நாடோடி இன சிறுமி கடந்த ஆண்டு ஜனவரி 10 ம் தேதி கதுவா மாவட்டத்தில் கடத்தப்பட்டு கோயிலுக்குள் 4 நாட்கள் வைத்து வன்புணர்வு செய்யப்பட்டு  கொல்லப்பட்டார். சிறுமியின் தலை பாறையின் மீது கிடந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

  3. உடல் காட்டிலும் கிடந்தது என ஜூன் 17 அன்று  கண்டுபிடிக்கப்பட்டது.  மூன்று நாட்கள் கழித்து மைனர் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். 

  4. இந்த வழக்கு தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. இதனால் இந்த வழக்கை குற்றவியல் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டது. துணை ஆய்வாளர் மற்றும் தலைமை கான்ஸ்டபிள் இருவரும் ஆதாரங்களை அழிக்க முற்பட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.  முக்கிய குற்றவாளி ஓய்வு பெற்ற வருவாய் துறை அதிகாரி சஞ்சி ராம்  கடந்த ஆண்டு மார்ச் 20 அன்று சரணடைந்தார். 

  5. சஞ்சி ராம், அவரது மகன் விஷால் மற்றும் அவரது நண்பர் ஆனந்த் தத்தா சிறப்பு காவல்துறை அதிகாரிகளான தீபக் கஜூரியா மற்றும் சுரேந்தர் வர்மா  ஆதாரங்களை அழிக்க முற்பட்ட துணை ஆய்வாளர் ஆனந்த் தத்தா மற்றும் தலைமை கான்ஸ்டபிள் திலக் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

  6. குற்றவியல் பிரிவின் விசாரணைப்படி  கதுவா நகரில் நமாஸ் செய்ய அடிக்கடி வெளியே வருவது குறித்த பயத்தினை உருவாக்கவே சிறுமியை வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  7. இந்த வழக்கில் பாஜக தலைவர்கள் குற்றம் சாட்ட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில்  செளத்ரி லால் சிங் மற்றும் பிரகாஷ் கங்கா ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

  8. கதுவா நீதிமன்றத்தில் ஏப்ரல் 9 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வந்தபோது நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அதை தடுக்க முற்பட்டனர். இதனால்  உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஜம்மூ காஷ்மீரில் இருந்து மாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கின் வழக்கறிஞர்கள் ஜே.கே. சோப்ரா, எஸ்.எஸ் பாஸ்ரா மற்றும் ஹர்மீந்தர் சிங் ஆகியோரை உள்ளடக்கியது. 

  9. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் குர்தாஸ்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற விசாரணைகள் அனைத்தும் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. 

  10. கடந்த ஆண்டு கதுவா சிறுமியின் குடும்பத்தினர் வழக்கறிஞர் தீபிகா ராஜ்வத்தை வழக்கு குறித்து வாதாடுவதில் நிறுத்திக் கொண்டனர்.ராஜ்வத் இந்த வழக்கு விசாரிக்கப்படத் தொடங்கியது முதல் கொலை மிரட்டல் வந்து கொண்டே இருப்பதாக கூறினார். 



Post a comment
.