This Article is From Feb 15, 2020

“வண்ணாரப்பேட்டையில் போலீஸ் அதிகாரி தாக்கப்பட்டார்!”- எச்.ராஜா வெளியிட்ட ‘பகீர்’ தகவல்!!

Vannarapettai Row: “சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறை அதிகாரி முஸ்லீம் கலவரக் காரர்களால் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்"

“வண்ணாரப்பேட்டையில் போலீஸ் அதிகாரி தாக்கப்பட்டார்!”- எச்.ராஜா வெளியிட்ட ‘பகீர்’ தகவல்!!

இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Vannarapettai Row: சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. அதனை அடுத்து பழைய வண்ணாரப்பேட்டையில் கூடி இருந்த போராட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தியதோடு கண்மூடித்தனமான தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் இந்த தாக்குதலில் ஒரு சிலர் படுகாயமடைந்ததாக தெரிகிறது. இது தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் பற்றி பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, ட்விட்டரில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். 

அவர், “சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறை அதிகாரி முஸ்லீம் கலவரக் காரர்களால் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாநிலம் முழுவதும் கலவரக்காரர்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்” என்று கொதிப்புடன் ட்வீட்டியுள்ளார். 

நேற்று, போராட்டத்தில் ஈடுபட்டதாக 120 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் உடனடியாக வைரலாக பரவியது. 

சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் டெல்லியில் போலீசார் தாக்குதலில் ஈடுபட்டது போல், சென்னையிலும் நடந்த இந்த சம்பவம் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஒரு சில மணி நேரங்களில் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு தரப்பினர் வண்ணாரப்பேட்டை மற்றும் பிராட்வேயில் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2வது நாளாக இன்றும் அவர்களது போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 

.