This Article is From Aug 16, 2018

வாஜ்பாய் மறைவு : நாளை மாலை 4 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைப்பெறுகிறது

ஆகஸ்டு 22 ஆம் தேதி வரை,  நாடு முழுவதும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

வாஜ்பாய் மறைவு : நாளை மாலை 4 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைப்பெறுகிறது

 

புதுடில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச் சடங்குகள், ஸ்மிருத்தி ஸ்தல் பகுதியில் மாலை 4 மணிக்கு நடைப்பெற உள்ளது.

இந்தியாவின் 10-வது பிரதமரான வாஜ்பாய், சிறுநீரக தொற்று மற்றும் இதய நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும், அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் எய்மஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதனை தொடர்ந்து, இன்று மாலை 05.05 மணி அளவில் வாஜ்பாய் இயற்கை எய்தினார்.

இதையடுத்து, ஆகஸ்டு 22 ஆம் தேதி வரை,  நாடு முழுவதும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

டில்லி கிருஷ்ணா மேனன் மார்க் பகுதியில் அமைந்திருக்கும் இல்லத்தில், வாஜ்பாயின் உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8.30 மணி வரை வாஜ்பாயின் நல்லுடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட உள்ளது. அதன் பின்னர், காலை 9 மணி அளவில், தீன தயாள உபாத்யாய மார்க் பகுதியில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு வாஜ்பாயின் நல்லுடல் கொண்டு செல்லப்படுகிறது.

மதியம் 1 மணி அளவில், யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்மிரித்தி ஸ்தல் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மாலை 4 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைப்பெற உள்ளது என்று பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.