
அபராதங்கள் விதிப்பதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற நோக்கில் ஷா, இதைச் செய்ததாக கூறுகிறார்.
புதிய மோட்டார் வாகனச் சட்டம், 2019 அமலுக்கு வந்ததில் இருந்து, சாலை விதிகளை மீறுவோருக்கு பல்லாயிரம் ரூபாய் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருவதை தினம் தினம் பார்த்து வருகிறோம். இதற்கு தீர்வு காண வேண்டும் என்று நினைத்த குஜராத்வாசி ஒருவர், புதிய ‘ஹெல்மட் ஃபார்முலா'-வை கண்டுபிடித்துள்ளார்.
வடோதராவில் வசித்து வரும் ஆர்.ஷா, தனது லைசென்ஸ், வண்டியின் பதிவு நகல், காப்பீட்டு நகல் மற்றும் வாகனம் சார்ந்த பிற ஆவணங்களை தனது ஹெல்மட்டில் ஒட்டிவைத்துள்ளார் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
அபராதங்கள் விதிப்பதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற நோக்கில் ஷா, இதைச் செய்ததாக கூறுகிறார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்ட புகைப்படங்களில் ஷா, வண்டியின் ஆவணங்களை தனது தலைக்கவசத்தில் ஒட்டி வைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
Gujarat: R Shah, a resident of Vadodara has pasted his driving license, RC, insurance & other documents on his helmet. Says, "Helmet is the first thing I put on before riding a bike, that's why I pasted all documents on it so I don't face any fines as per new traffic regulations" pic.twitter.com/OezdsV1ONT
— ANI (@ANI) September 10, 2019
“வண்டி ஓட்டுவதற்கு முன்னர் நான் அணியும் முதல் பொருள் ஹெல்மட்தான். அதனால்தான் அதில் எனது அனைத்து ஆவணங்களையும் ஒட்டினேன். இப்படிச் செய்வதன் மூலம் யாரும் எனக்கு அபராதம் விதிக்க முடியாது” என்று தன் செயலை விளக்குகிறார் ஷா.
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி அபராதங்கள் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. சில அபராதங்கள் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.