This Article is From Jan 12, 2019

அகிலேஷ் - மாயாவதியின் கூட்டு… யோகி ஆதித்யநாத்தின் குட்டு!

25 ஆண்டுகளுக்கு முன்னர் அகிலேஷும் மாயாவதியும் கூட்டணி அமைத்து உத்தர பிரதேச்சித்தில் ஆட்சி அமைத்தனர்.

அகிலேஷ் - மாயாவதியின் கூட்டு… யோகி ஆதித்யநாத்தின் குட்டு!

உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 லோக்சபா தொகுதிகளில் சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜும் தலா 38 இடங்களில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lucknow:

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். உத்தர பிரதேசத்தின் இரண்டு பிரதான கட்சிகள் இப்படி அறிவித்துள்ளது, வரும் தேர்தலில் மிகப் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணி குறித்து மாயாவதி கூறுகையில், ‘நாங்கள் இருவரும் இணைவது அமித்ஷாவுக்கும் மோடிக்கும் தூக்கமில்லாமல் செய்யும்' என்று சவால் விட்டுள்ளார். ஆனால், இந்தக் கருத்துகளை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

அகிலேஷ் - மாயாவதி கூட்டணி குறித்து ஆதித்யநாத், “எவ்வளவு பெரிய கூட்டணி பாஜக-வுக்கு எதிராக அமைந்தாலும் சரி, நாங்கள் 2014 ஆம் ஆண்டைவிட இந்த முறை மிகச் சிறப்பான வெற்றியைப் பெறுவோம். வெகு நாட்களாக அரசியல் எதிரிகளாக இருந்த இருவர், ‘மகா கூட்டணி' குறித்து பேசுகிறார்கள். சர்வாதிகாரத்துக்கும், ஊழலுக்கும், ஸ்திரமற்ற ஆட்சிக்கும்தான் இந்தக் கூட்டணி வித்துடும்” என்று வறுத்தெடுத்துள்ளார். 
 

klcgd68g

25 ஆண்டுகளுக்கு முன்னர் அகிலேஷும் மாயாவதியும் கூட்டணி அமைத்து உத்தர பிரதேச்சித்தில் ஆட்சி அமைத்தனர். ஆனால், இருவருக்கும் இடையிலான கூட்டணி சீக்கிரமே முறிந்தது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த 3 இடைத் தேர்தலில் மீண்டும் சேர்ந்து நின்றனர். அதில் பாஜக-வை 3 தொகுதியிலும் அவர்கள் கூட்டணி தோற்கடித்தது. இதைத் தொடர்ந்து இருவரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. 

அதை மெய்பிக்கும் வகையில் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 லோக்சபா தொகுதிகளில் சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜும் தலா 38 இடங்களில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகள் தற்போதைக்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் அகிலேஷ்-மாயாவதி கூட்டணி போட்டியிடாது என்று தெரிகிறது. 

.