இந்தியா - சீனா வீரர்கள் மோதல் பிரச்னையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: அமெரிக்கா

20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளதை கவனித்தோம், அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இந்தியா - சீனா வீரர்கள் மோதல் பிரச்னையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: அமெரிக்கா

இந்தியா - சீனா வீரர்கள் மோதல் பிரச்னையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: அமெரிக்கா (Representational image)

ஹைலைட்ஸ்

  • இந்தியா - சீனா வீரர்கள் மோதல் பிரச்னையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்
  • 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளதை கவனித்
  • கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவிலான மிகப்பெரிய ராணுவ மோதலாகும்
Washington:

லடாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவ படைகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து அமெரிக்கா நிலைமையை "உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது", இருநாடுகளுக்கிடையேயான வேறுபாடுகள் அமைதியான முறையில் பேசி தீர்க்கப்படும் என்று நம்புவதாக வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி  தெரிவித்துள்ளார். 

கால்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு சீன ராணுவ வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் ஒரு ராணுவ அதிகாரி உட்பட இருபது இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இது கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவிலான மிகப்பெரிய ராணுவ மோதலாகும், இது இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே நிலையற்ற எல்லை நிலைப்பாட்டை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனிடையே, இந்திய - சீன எல்லைப் பிரச்சனை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 

20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளதை கவனித்தோம், அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக கடந்த ஜூன் 2, 2020 அன்று அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இடையே நடந்த தொலைபேசி உரையாடலின் போது, இந்தியா-சீனா எல்லையில் நிலைமை குறித்து விவாதித்தனர் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் முதலில் இந்திய ராணுவம் ஒரு அதிகாரி மற்றும் இரண்டு வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவித்திருந்தது. ஆனால் தொடர்ந்து, மாலையில் வெளியிட்ட அறிக்கையில், இந்த எண்ணிக்கையை 20 ஆக திருத்தியது, மேலும் இந்த பதற்றமான சூழலில் பணியில் இருந்த 17 இந்திய ராணுவ வீரர்கள், மிகவும் உயரமான பகுதியில் குறைவான வெப்பநிலை கொண்ட இடத்தில் காயமுற்றனர். அவர்கள் மரணமடைந்துள்ளார்கள். 

பெய்ஜிங்கில், மக்கள் விடுதலை ராணுவம் (PLA) வீரர்கள் சந்தித்த உயிரிழப்புகள் குறித்து சீன வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் மவுனமாக இருந்து வருகின்றனர். ஆனால் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஹு ஜிஜின், உயிரிழப்புகள் இருப்பதாக ட்வீட் செய்துள்ளார். 

அமெரிக்க செய்திகளில் ஒரு அறிக்கையின்படி, இந்திய வீரர்களுடனான வன்முறை மோதலில் ஒரு மூத்த அதிகாரி உட்பட குறைந்தது 35 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.