This Article is From Mar 30, 2020

அடுத்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் இறப்பு விகிதம் அதிகரிக்கக்கூடும்: ட்ரம்ப்

ஜீன் 1 முதல் நாடு இந்த தொற்றிலிருந்து விடுபட்டு நாடு வேறு பாதையில் பயணிக்கும் எனத் தான் எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் இறப்பு விகிதம் அதிகரிக்கக்கூடும்: ட்ரம்ப்

ஜூன் 1 க்குள் அமெரிக்கா மீட்கும் பாதையில் இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறினார். (கோப்பு)

Washington:

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த தொற்று நோயானது உலக அளவில் பரவத்தொடங்கியது. தற்போது சீனா அந்நாட்டில் அதைக் கட்டுப்படுத்திவிட்டாலும் கூட, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இந்த தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றது.

அமெரிக்காவில் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்திருக்கிறது. இதனால் அந்நாடு முழு முடக்க நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் “கொரோனா தொற்றால் இறப்பவர்களின் விகிதம் அடுத்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், சமூக விலகல் நெறிமுறைகள் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கான முன் எதிர்பார்ப்புகளை அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஜீன் 1 முதல் நாடு இந்த தொற்றிலிருந்து விடுபட்டு நாடு வேறு பாதையில் பயணிக்கும் எனத் தான் எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

.