This Article is From Mar 29, 2020

கொரோனா பாதிப்பிற்கு அரச குடும்பத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு

86 வயதான ஸ்பானிஷ் இளவரசி மரியா தெரசா கொரோனா நோய்த் தொற்றால் மரணமடைந்திருக்கிறார். கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த அரச குடும்பத்தைச் சார்ந்த முதல் நபர் இவராவர்.

கொரோனா பாதிப்பிற்கு அரச குடும்பத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு

தனது மாற்றுச் சிந்தனையாலும், முற்போக்கு கருத்தோட்டத்தாலும் அவர் சிவப்பு இளவரசி என்று அழைக்கப்பட்டார்.

Washington D.C.:

சர்வதேச அளவில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் தற்போது அரச குடும்பத்தில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

86 வயதான ஸ்பானிஷ் இளவரசி மரியா தெரசா கொரோனா நோய்த் தொற்றால் மரணமடைந்திருக்கிறார். கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த அரச குடும்பத்தைச் சார்ந்த முதல் நபர் இவராவர். இளவரசி மரியா தெரசா ஸ்பானிஷ் அரசரான ஆறாம் பிலிப்பின் உறவினராவார். இளவரசியின் சகோதரரான என்ரிக் டி போர்பன் பேஸ்புக்கில் இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

“இன்று பிற்பகல் எங்கள் சகோதரி மரியா தெரசா 86 வயதில் கொரோனா தொற்றால் மரணமடைந்திருக்கிறார்” என்று என்ரிக் டி போர்பன் பேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்பெயின் மன்னர் ஆறாம் பிலிப்புக்கு கொரோனா பரிசோதனை செய்து முடிவில் நோய்த் தொற்று இல்லை என அறிந்துகொண்ட சில வாரத்திற்குப் பிறகு இளவரசி மரியா தெரசா மரணமடைந்திருக்கிறார். அவரின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜூலை 28, 1933 இல் பிறந்த இளவரசி மரியா தெரசா பிரான்சில் படித்து, பாரிஸின் சோர்போனில் பேராசிரியராகவும், மாட்ரிட்டின் கம்ப்ளூடென்ஸ் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராகவும் பணியாற்றியிருந்தார்.

தனது மாற்றுச் சிந்தனையாலும், முற்போக்கு கருத்தோட்டத்தாலும் அவர் சிவப்பு இளவரசி என்று அழைக்கப்பட்டார்.

ஏற்கெனவே பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கொரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டிருந்தார். லேசான பாதிப்புகளைக் கொண்டிருந்தாலும், நல்ல ஆரோக்யதுடன் இருப்பதாகவும், அன்றாட பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் புதன்கிழமை காலை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் கிளாரன்ஸ் ஹவுஸ் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டிருந்தாலும் நலமாக இருக்கிறார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை செய்தித் தொடர்பாளர் ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்திருக்கிறார்.

.