சிங்கப்பூரில் சிறையில் அடைக்கப்பட்ட ஹச்.ஐ.வி பாசிட்டிவ் உள்ள 14,200 அமெரிக்க கைதிகளின் விவரத்தை ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர்.
தேசிய சுகாதார தகவல் அமைப்பில் நடைபெற்ற மிகப்பெரிய சைபர் அட்டாக்கின் போது இந்த தகவல்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று சிங்கப்பூர் சுகாராதத்துறை கூறியுள்ளது.
அமெரிக்க குடிமகனான மிக்கி பரெரா சிங்கப்பூரில் போதைப்பொருள் வழக்கில் கைதான இவர், தனது ஹச்.ஐ.வி தகவல் குறித்தும் பொய் கூறியுள்ளார்.
கடந்த வாரம் பரேரா தான் ஆன்லைனில் பெயர், ஐடி எண், போன் நம்பர், முகவரி உள்ளிட்ட 5400 சிங்கப்பூர்காரர்கள் மற்றும் 8800 வெளிநாட்டவர்களின் விவரத்தை ஆன்லைனில் வெளியிட்டுள்ளார்.
பல நாடுகளில் ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் உள்ளவர்களின் விவரங்களை பரெரா வேறு ஒரு நண்பரின் உதவியோடு இந்த விஷயத்தை செய்துள்ளார்.
அந்த நண்பர் மூலமாக தான் இந்த தகவலை எடுத்திருக்க முடியும் என்று சுகாதார துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இதன் மூலம் அவர்களுக்கு ஆதாயமிருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும் என்றார்.
பரெராவின் கருத்து எதுவும் வெளியாகவில்லை. தற்போது அவர் போலீஸ் கட்டுபாட்டில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த வருடம் சிங்கப்பூர் பிரதமர் உட்பட 15 லட்சம் பேரின் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)