This Article is From Aug 09, 2019

உ.பியில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் 2 உண்டு உறைவிடப்பள்ளி - அரசு அறிக்கை

“சோன்பத்ரா மாவட்டத்தில் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினரின் குழந்தைகளின் கல்விக்காக சிறுவர் மற்றும் சிறுமியர்க்கான இரண்டு குடியிருப்பு பள்ளிகளை நிர்மாணிக்க மாநில தலைமை செயலாளர் அனுப் சந்திர பாண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பியில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் 2 உண்டு உறைவிடப்பள்ளி - அரசு அறிக்கை

இந்த பள்ளி சமீபத்தில் நிலத்தகராறினால் துப்பாக்கி சூட்டில் 10 பேர் இறந்த பகுதியில்தான் அமைக்கப்படவுள்ளது.

Lucknow:

உத்தர பிரதேச  மாநிலத்தில் அரசு பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்களுக்காக இரண்டு உண்டு உறைவிடப் பள்ளியினை அமைத்துள்ளது. இந்த பள்ளி சமீபத்தில் நிலத்தகராறினால் துப்பாக்கி சூட்டில்  10 பேர் இறந்த பகுதியில்தான் அமைக்கப்படவுள்ளது. 

பெண்கள் மட்டுமே பயிலும் வகையில் ஒரு பள்ளியும், ஆண்கள் மட்டுமே பயிலும் பள்ளி ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இரண்டும் உண்டு உறைவிட பள்ளியாகவே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சோன்பத்ரா மாவட்டத்தில் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினரின் குழந்தைகளின் கல்விக்காக சிறுவர் மற்றும் சிறுமியர்க்கான இரண்டு குடியிருப்பு பள்ளிகளை நிர்மாணிக்க மாநில தலைமை செயலாளர் அனுப் சந்திர பாண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

படுகொலைக்கு பின்னர் மாவட்டத்திற்கு  வருகை தந்தபோது தனது அரசு பள்ளிகளை அமைக்கப்போவதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

பெண்கள் பள்ளி பர்கானா பர்ஹரின் கோரவாலில் உள்ள மூத்தியா கிராமத்திலும். ராபர்ட்ஸ்கஞ்சின் பர்கானா சிரியாவில் சிறுவர் பள்ளியும் கட்டப்படும். 

இந்த பள்ளிகள் மத்திய அரசால் இயக்கும் நவோதயா பள்ளிகளின் வரிசையில் இருக்கும். 

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.