கொரோனா நெருக்கடி காரணமாக பள்ளி கல்வியிலிருந்து வெளியேற்றப்படும் உ.பி மாணவர்கள்!

உத்தர பிரதேசத்தில் 5-ம் வகுப்பு வரை பள்ளி இடைநிற்றல் விகிதம் 21.67 சதவிகிதமாக உள்ளது. தமிழகத்தில் இந்த விகிதம் 1.37 ஆக உள்ளது.

கொரோனா நெருக்கடி காரணமாக பள்ளி கல்வியிலிருந்து வெளியேற்றப்படும் உ.பி மாணவர்கள்!

5 ஆம் வகுப்பு மாணவி சுப்ரியா குப்தா தனது தந்தையின் சிறிய உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய உதவுகிறார்

Lucknow:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், பள்ளிகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகளை நடத்த தொடங்கியுள்ள நிலையில், அரசு பள்ளிகளின் நிலை மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக உத்தர பிரதேச மாநிலத்தில் பல மாணவர்கள் தங்கள் கல்வியை பாதியில் நிறுத்தம் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் செல்போன்களில் அல்லது கணினிகளில் தங்கள் கல்வியை தொடருகின்றனர். ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு செல்போன் அல்லது கணினி 4G இணைய சேவை போன்றவை எட்டாக்கனியாக மாறியுள்ளது.

v4h0mbtg

முகமது சந்த், 12, தனது தந்தையுடன் இப்போது ஒரு சமோசா ஸ்டாலை நடத்த உதவுகிறார்

“குழந்தைகள் படிக்காவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் எப்படி முன்னேறுவார்கள்? அவர்கள் மேலும் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஆனால் என்னிடம் பணம் இல்லை. நான் மிகவும் உதவியற்றவனாக உணர்கிறேன்” என மேற்கு உ.பி.யின் சஹரன்பூரைச் சேர்ந்த 42 வயதான முகமது இலியாஸ் கூறுகிறார். கொரோனா தொற்றுக்கு முன்னதாக தான் மாதம் 12 ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும், தற்போது தனது 12 வயது மகனுடன் சமோசா கடையை நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.

அவர் தனது மகனை தனது சேரி அருகே ஒரு உருது நடுத்தர பள்ளிக்கு அனுப்பினார். இப்போது 4 மாதங்களாக, சிறுவன் தனது தந்தையுடன் ஸ்டாலில் நேரத்தை செலவிடுகிறான்.

fl7qro5

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பள்ளிகள் நான்கு மாதங்களாக மூடப்பட்டுள்ளன

“நான் கடையில் என் நாட்களைக் கழித்து என் தந்தைக்கு உதவுகிறேன். பணம் இருந்தால், நான் என் பள்ளிக்குத் திரும்புவேன், இல்லையென்றால் எனக்குத் தெரியாது. நான் மேலும் படிக்க விரும்புகிறேன்.” என சிறுவன் கூறுகிறான்.

2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உத்தரபிரதேசத்தில் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணிக்கையில் குழந்தைகள் உள்ளனர். அரசாங்க தரவுகளின்படி, மாநிலத்தின் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் 63 சதவீதம் அரசு நடத்தும் பள்ளிகளில் உள்ளன, ஆனால் அரசுப் பள்ளிகளை விட அதிகமான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுகிறார்கள். உ.பி.யில் 31 மாணவர்களுக்கு ஒரு பள்ளி ஆசிரியர் இருக்கிறார் - மகாராஷ்டிராவில், இந்த எண்ணிக்கை 22 மாணவர்களுக்கு ஒரு பள்ளி ஆசிரியர்.

உத்தர பிரதேசத்தில் 5-ம் வகுப்பு வரை பள்ளி இடைநிற்றல் விகிதம் 21.67 சதவிகிதமாக உள்ளது. தமிழகத்தில் இந்த விகிதம் 1.37 ஆக உள்ளது.

தொற்று நொய் பாதிப்பு காரணமாக பெற்றோர்களின் வருவாய் குறைந்துள்ளது. மற்றும் பள்ளி விடுமுறை காரணமாக மாணவர்கள் பெற்றோர்களுடன் உதவிக்காக வேலைகளுக்கு செல்கின்றனர். சமோசா கடை தொடங்கி, புத்தகங்கள் விற்பனை செய்யும் கடைகள் வரை குழந்தைகள் வேலை செய்யத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.