This Article is From Nov 02, 2018

“உ.பி. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 30 நாட்கள் ஊதியம் வழங்கப்படும்”

2017-18-ம் ஆண்டில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்குவதற்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டுள்ளார்

“உ.பி. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 30 நாட்கள் ஊதியம் வழங்கப்படும்”

சுமார் 14 லட்சத்திற்கும் அதிகான ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது.

Lucknow:

தீபாவளியையொட்டி பல்வேறு மாநிலங்கள் அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் தீபாவளி போனஸ் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, அங்கு பணியாற்றும் 14.02 லட்சம் அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்குவதற்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த புதிய உத்தரவால் மாநில அரசின் கஜானாவில் இருந்து ரூ. 967.63 கோடி அளவுக்கு கூடுதல் செலவு ஏற்படும். இதேபோன்று டி.ஏ. அலவன்ஸ் தொகையும் கடந்த ஜூலை 1-ல் இருந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசுக்கு மேலும் ரூ. 789.62 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும். இதேபோன்று போனஸ் தொகையில் 75 சதவீத தொகை பி.எஃப். கணக்கில் ஊழியர்களுக்கு டெபாசிட் செய்யப்படும் என்றும் உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

.