டெல்லியில் தீபாவளியன்று உச்சத்தை எட்டிய காற்று மாசுபாடு!

Today Pollution Level in Delhi: டெல்லி தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம் பகுதியிலும் காற்று தர குறியீடானது அதன் உச்ச அளவான 999-ஐ எட்டியது.

Delhi Pollution Level Today: இரவு 11 மணிக்கு காற்று மாசுபாட்டின் அளவு 302 என்றளவில் மிக மோசமாக இருந்தது

ஹைலைட்ஸ்

  • பட்டாசு வெடிக்க விதித்த கால அளவை டெல்லி மக்கள் கடைபிடிக்கவில்லை
  • பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி அளித்த நிலையில் அதனை பின்பற்றவில்லை
  • காற்று தர குறியீடானது பல பகுதிகளில் அதன் உச்ச அளவான 999-ஐ எட்டியது
New Delhi:

டெல்லியில் தீபாவளியன்று காற்று மாசுப்பாட்டை (Air Pollution Level in Delhi) கட்டுக்குள் வைக்க தவறியதால், அபாய அளவை தாண்டி காற்று மாசுபாடு நிலவியது. டெல்லி ஆனந்த விகார் பகுதியில் காற்று தர குறியீடானது அதன் உச்ச அளவான 999-ஐ எட்டி அபாய ஒலி எழுப்பியது. தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம் பகுதியிலும் காற்று தர குறியீடானது அதன் உச்ச அளவான 999-ஐ எட்டியது. சாணக்யாபூரியிலிருக்கும் அமெரிக்க தூதரகம் காற்று மாசுபாட்டு குறியீட்டில் 459ஐ தொட்டது.

டெல்லியில் உள்ள காற்று மாசு (Air Pollution Level in Delhi) காரணமாக பசுமை பட்டாசுகளை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், தலைநகர் டெல்லியில் இரவு 10 மணிக்கு மேலும் பட்டாசு மூலம் காற்று மாசுபடுத்தப்பட்டது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் காற்றின் மாசுபாட்டை கணக்கிட்டபோது இரவு 11 மணிக்கு காற்று மாசுபாட்டின் அளவு 302 என்றளவில் மிக மோசமாக இருந்தது.

டெல்லியில் தீபாவளியன்று இரவு 7 மணியிலிருந்து காற்றின் தரம் மாசுபாடு அடைய தொடங்கியது. காற்று மாசுபாட்டின் தரம் 281லிருந்து இரவு 7 மணிக்கு 291-ஐ தொட்டது. இரவு 10 மணிக்கு 296 இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்தது.

காற்று மாசுபாட்டின் அளவு முறையே, 0 லிருந்து 50 வரை இருந்தால் நல்லது, 51 லிருந்து 100 வரை காற்றின் தரம் திருப்பதிகரமாக உள்ளது. 101 லிருந்து 200 வரை மிதமான நிலை, 201 லிருந்து 300 என்பது காற்றின் மிக மோசமான நிலையை குறிக்கிறது. 401 மேல் சென்றால் காற்று உச்ச கட்ட தர கேட்டினை சந்தித்துள்ளது குறிக்கிறது.

Newsbeep

உச்ச நீதிமன்றம் தீபாவளியன்று இரவு 8 மணியிலிருந்து 10 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதியளித்திருந்தது. ஓசை குறைவாக வெளிப்படுத்தக்கூடிய, வேதிப் பொருட்கள் அதிகமில்லாத பட்டாசுகளை தயாரித்து விற்க மட்டுமே உச்சநீதி மன்றம் அனுமதி கொடுத்திருந்தது.