This Article is From Aug 20, 2020

உத்தர பிரதேசத்தில் காணமல் போன இளம்பெண் சடலமாக கண்டெடுப்பு!

முதல்கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவர் எதோ ஊற்றி எரித்துக்கொல்லப்பட்டதாக தெரிகிறது.

உத்தர பிரதேசத்தில் காணமல் போன இளம்பெண் சடலமாக கண்டெடுப்பு!

Bhadohi Teen Death: உத்தர பிரதேசத்தில் காணமல் போன இளம்பெண் சடலமாக கண்டெடுப்பு!

Bhadohi, Uttar Pradesh:

உத்தரபிரதேசத்தின் படோஹி மாவட்டத்தில் காணாமல் போன இளம் பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் கூறும்போது, அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். 

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பாலியல் வன்கொடுமை சம்பங்கள் நிகழவில்லை என்று தெரியவந்துள்ளது. 

எனினும், அந்த சிறுமி ஆசிட் வீச்சுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. அதனால், ஐந்து மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் புதிதாக மீண்டும் இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த இளம்பெண்ணின் உடலில் தீக்காயங்கள் உள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக காவல்துறை தலைமை அதிகாரி ராம் பதாவன் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, முதல்கட்ட விசாரணையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அவரது உடல் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டுள்ளது. 

நேற்று மாலை இரண்டு மருத்துவர்கள் அவரது உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த பெண் ஆசிட் வீச்சுக்கு ஆளானதாக அந்த கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

திங்கட்கிழமையன்று தனது கிராமத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த போது அந்த பெண் காணாமல் போயுள்ளார். இதையடுத்து, படோஹியின் எல்லையில் உள்ள ஜான்பூர் மாவட்டத்தின் ஒரு பகுதியில் அவர் நேற்றைய தினம் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக படோஹி காவல்துறை தலைமை அதிகாரி ராம் பதான் கூறும்போது, அந்த பெண்ணின் பெற்றோர் மாடு மேய்க்க சென்ற தங்கள் மகள் திரும்பி வரவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். அவர்களது குடும்பத்தினர் சிலர் மீதும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். நாங்கள் அவர்களிடமும் விசாரித்தோம், ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

முதல்கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவர் எதோ ஊற்றி எரித்துக்கொல்லப்பட்டதாக தெரிகிறது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் விவரம் தெளிவாக தெரியவரும். 

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், இளம்பெண்ணின் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக, டெல்லியை சேர்ந்த 25 வயது மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் உத்தர பிரதேசத்தின் அக்ராவில் அவர் படிக்கும் கல்லூரிக்கு ஒரு சில கி.மீ அருகில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ மாணவியை துன்புறுத்தியதாக அவரது குடும்பத்தினரால் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

ஆக்ராவில் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு படித்து வரும் அந்த மாணவியின் குடும்பத்தினர் போலீசாரிடம் கூறும்போது, செவ்வாய்க்கிழமை மாலை முதல் அவரை காணவில்லை. அவரது சடலம் கிடைப்பதற்கு சற்று நேரம் முன்பு அவர் கடத்தப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

.