This Article is From Sep 19, 2020

யுஜிசி நெட் ஜூன் 2020 ஹால் டிக்கெட் வெளியீடு!

பொதுவாக யுஜிசி நெட் தேர்வானது வருடத்தில் இரண்டு முறை, ஜூன் மாதத்தில் ஒரு முறை மற்றும் டிசம்பரில் ஒரு முறை நடத்தப்பட்டு வருகின்றது.

யுஜிசி நெட் ஜூன் 2020 ஹால் டிக்கெட் வெளியீடு!

யுஜிசி நெட் 2020

New Delhi:

யுஜிசி நெட் ஜூன் 2020 ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) இன்று வெளியிட்டுள்ளது, இந்த தேர்வானது செப்டம்பர் 24 முதல் நவம்பர் 5 வரை நடத்த என்.டி.ஏ திட்டமிட்டுள்ளது.

யுஜிசி நெட் 2020 தேர்வின் திருத்தப்பட்ட தேர்வு தேதிகளை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, யுஜிசி நெட் 2020 தேர்வுகள் இப்போது செப்டம்பர் 24, 25, 29,30 மற்றும் அக்டோபர் 1, 7, 9, 17, 21, 22, 23 மற்றும் நவம்பர் 10, 2020 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் நடக்க இருக்கும் பாடங்களுக்கான அட்மிட் கார்டு அதிகாரப்பூர்வ வலைத்தளமான ugcnet.nta.nic.in இல் வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள பாடங்களுக்கான அட்மிட் கார்டு அடுத்த சில நாட்களில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக இந்த தேர்வு பல முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல ஒத்திவைக்கப்பட்ட்து.  பிறகு, தேர்வுகள் செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 25 வரை திட்டமிடப்பட்டது. பிறகு இந்தத் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன, இப்போது முழுத் தேர்விற்கான விரிவான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர் மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (ஜே.ஆர்.எஃப்) பதவிக்கு விண்ணப்பிக்கும் தகுதியை தீர்மானிக்க யு.ஜி.சி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு பல்வேறு பாடங்களுக்காக நடத்தப்படுகிறது பாடவாரியாக முதல் 6% மதிப்பெண் பெற்றவர்கள் நெட்தேர்வில் தகுதி பெறுகின்றனர். பொதுவாக இந்த தேர்வானது வருடத்தில் இரண்டு முறை, ஜூன் மாதத்தில் ஒரு முறை மற்றும் டிசம்பரில் ஒரு முறை நடத்தப்பட்டு வருகின்றது.

யுஜிசி நெட் தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளம் : ugcnet.nta.nic.in



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.