This Article is From Oct 08, 2019

உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

UGC NET 2019: நெட் தேர்வுகளுக்கான நுழைவு அட்டைகள் நவம்பர் 9,2019 அன்று வெளியிடப்படும். தேர்வு நாள் டிசம்பர் 2 முதல் டிசம்பர் 6, 2019 வை கணினி அடிப்படையில் நடைபெறும்.

உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

UGC NET 2019 : நெட் தேர்வுக்கு விண்ணபிக்க நாளை இறுதி நாள்.

New Delhi:

தேசிய தேர்வு ஆணையம் யூஜிசி நெட் தேர்வுக்கான விண்ணப்பம் செய்ய நாளை கடைசி நாள். நெட் தேர்வில் தேர்ச்சிய அடைந்தால் மட்டுமே கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணி புரிய முடியும். விண்ணப்பக் கட்டணத்தை அக்டோபர் 10,2019 க்குள் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்காத நபர்கள் கடைசி நேர அவசரத்தை தவிர்க்க இந்த செயல்முறையை இன்றே முடிக்க வேண்டும். யூஜிசி நெட் விண்ணப்ப செயல் முறை முடிந்தது, என்.டி.ஏ படிவத்தை திருத்தும் செயல்முறையை தொடங்கும்.

நெட் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தில் அக்டோபர் 18 முதல் 25 வரை எந்த திருத்தங்களையும் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

விண்ணப்பம் செய்த பின் உறுதிபடுத்தப்பட்ட பக்கம் உருவாக்கப்படும். விண்ணப்பம் செய்த நபர்கள் உறுதிபடுத்தப்பட்ட உருவாக்கப்படவில்லையென்றால் அக்டோபர் 18 முதல் 25 வரை காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை உதவிக்கான எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.பணம் செலுத்தியதற்கான போட்டோ காப்பி நகலுடன் அணுக வேண்டும். 

நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் கட்டணம் செலுத்தப்படவில்லையென்றால் விண்ணப்பம் முழுமையடையாத/ தோல்வியுற்றதாக கருதப்படும். 

நெட் தேர்வுகளுக்கான நுழைவு அட்டைகள் நவம்பர் 9,2019 அன்று வெளியிடப்படும். தேர்வு நாள் டிசம்பர் 2 முதல் டிசம்பர் 6, 2019 வை கணினி அடிப்படையில் நடைபெறும்.

.