This Article is From Sep 19, 2018

முத்தலாக்கை குற்றமாக கருதும் சட்டம்: அமைச்சரவை ஒப்புதல்!

முத்தலாக் நடைமுறை (Triple Talaq Ordinance) மூலம், முஸ்லீம் ஆண்கள் மும்முரை ‘தலாக்’ என்று சொல்லி உடனடியாக விவகாரத்து (instant divorce) வாங்க முடியும்

ராஜ்யசபாவில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், சட்டத்துக்கு அங்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை

New Delhi:

முத்தலாக் நடைமுறையைக் (Triple Talaq Ordinance) குற்றமாக கருதும் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்தான சட்டத்துக்கு நாடாளுமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. லோக்சபாவில் முத்தலாகிற்கு எதிரான சட்டத்திற்கு சுலபமாக ஒப்புதல் வாங்கப்பட்டது. ஆனால், ராஜ்யசபாவில் மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், இச்சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதனால், எதிர்கட்சிகள் கோரிய திருத்தங்கள் சட்டத்தில் செய்யப்பட்டது. அதன் பிறகு ராஜ்யசபாவிலும் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இது குறித்து முக்கியமான தகவல்கள்:

  1. முஸ்லீம் பெண்கள் (திருமண பாதுகாப்புச் சட்டம்) மசோதா 2017-க்கு, லோக்சபாவில் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், ராஜ்யசபாவில் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை.
  2. ராஜ்யசபாவில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெற சில திருத்தங்கள் செய்யப்பட்டன.
  3. முத்தலாக் நடைமுறை (Triple Talaq Ordinance) மூலம், முஸ்லீம் ஆண்கள் மும்முரை ‘தலாக்’ என்று சொல்லி உடனடியாக விவகாரத்து (instant divorce) வாங்க முடியும்.
  4. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள சட்டத்தின் மூலம், முத்தலாக்கை பின்பற்றுபவர்களுக்கு, அபராதத்துடன் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
  5. சட்ட மசோதாவில், பெண்ணுக்கு சம்பந்தமுடைய யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம் என்ற நடைமுறை இருந்தது. ஆனால், பெண்னோ அல்லது பெண்ணின் உறவினரோ தான் புகார் அளிக்கலாம் என்று பின்னர் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டது.
  6. மேலும் கணவர், இறங்கி வரத் தயாராக இருந்தால் சம்பந்தப்பட்டப் பெண் கொடுத்த புகாரை திரும்ப பெறலாம் என்ற நடைமுறையும் உள்ளது.
  7. பிணை வழங்குவது குறித்தும் திருத்தம் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கருத்து கேட்ட பின்னர் கணவருக்கு பிணை வழங்கப்படலாம் என்றும் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது.
  8. பிணை இல்லை என்ற சட்ட நடைமுறைக்கு திருத்தம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  9. பல நாட்களாக எதிர்கட்சிகளால் கோரப்பட்ட மாற்றங்களை அரசு தற்போது செய்துள்ளது.
  10. 2019-ல் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையும், அடுத்தடுத்து பல மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தல்களையும் மனதில் வைத்து சட்டத் திருத்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

.