This Article is From Oct 19, 2018

பஞ்சாபில் நடந்த ரயில் விபத்தில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

தசரா பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது ரயில் மோதியதால் விபத்து ஏற்பட்டு பெரும் உயிர்ச்சேதம் நிகழ்ந்துள்ளது

ரயில் வருவது குறித்து எச்சரிக்கை செய்யாததால் விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.

New Delhi:

தசரா பண்டிகையை முன்னிட்டு ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இன்று மாலை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அமிர்தசரஸின் ஜோதா பதக் என்ற இடத்தில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றபோது, அதனை ஏராளமான மக்கள் ரயில் பாதையிலும் நின்று கொண்டு பார்த்தனர்.

அப்போது, அங்கு வந்த ரயில் மக்கள் மீது மோதியதில் நூற்றுக்கணக்கானோருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் அளித்த தகவலில் சுமார் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் குழ்ந்தைகள் பெண்கள் உள்பட 700-க்கும் அதிகமானோர் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், மாவட்ட நிர்வாகமும், தசரா விழாவை நடத்தியவர்களும்தான் இந்த அசம்பாவிதத்திற்கு காரணம். ரயில் வரும்போது அதுகுறித்து முறையான எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். அது செய்யப்படாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

.