பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை: நவ்ஜோத் சிங்

இந்த விபத்தில், பாதிக்கப்பட்டவர்களையும், பெற்றோரை இழந்து தவிக்கும், அனைத்து குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்க்க தயார் என நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை: நவ்ஜோத் சிங்

தசரா விழா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட ரயில் விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர்

Amritsar:

பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகுதியின் அடிப்படையில் பஞ்சாப் அரசு வேலை வழங்கப்படும் என சுற்றுலா துறை அமைச்சருமான, நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ரயில் பாதையில் நின்று தசரா கொண்டாட்டங்களை ஏராளமானோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது வேகமாக வந்த ரயில் மோதியது. இந்த விபத்தில் இதுவரை 61 பேர் உயிரிழந்ததுள்ளனர். மேலும் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து குற்றவாளி என சந்தேகிக்கும் நபர்கள் மீது ரயில்வே போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியை நடத்தியவர்களே இதற்கு முழு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியின் கவுன்சிலர் விஜய்மாதவன் மற்றும் அவரது மகன் சவுராப் மதன் மிது உள்ளிட்ட இருவரும் விபத்து நடந்த அன்று முதல் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்து வரும் சவுராப் மதன் மிது, இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், விழா ஏற்பட்டுக்கான அனைத்து அனுமதிகளையும் பெற்று தான் விழா நடத்தினோம். இருப்பினும் சிலர் எங்களுக்கு எதிராக சதி செய்கின்றனர் என அதில் தெரிவித்திருந்தார்.

இதேபோல், இந்த விபத்தில், பாதிக்கப்பட்டவர்களையும், பெற்றோரை இழந்து தவிக்கும், அனைத்து குழந்தைகளையும் தத்தெடுத்து தனது சொந்த செலவில் வளர்க்க தயார் என அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகுதியின் அடிப்படையில் பஞ்சாப் அரசு வேலை வழங்கப்படும் என்றார்.

மேலும், இதுவரை 43 குடும்பங்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள குடும்பத்தினருக்கு விரைவில் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.