ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளை நான் தத்தெடுக்கிறேன்: காங்., அமைச்சர்

காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து விபத்தில் தங்களது குடும்பத்தினரை இழந்து தவிப்பவர்களுக்கு தான் ஆதரவு அளிக்க இருப்பதாகவும், பெற்றோரை இழந்த அனாதையான குழந்தைகளின் படிப்பிற்கு நிதியுதவி அளிக்க இருப்பதாகவும்

ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளை நான் தத்தெடுக்கிறேன்: காங்., அமைச்சர்

நவ்ஜோத் சிங் தனது மனைவி மீது குற்றச்சாட்டுகள் எழுந்த போது, அவர் பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்தார்.

Chandigarh:

பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் கூறுகையில், கடந்த வெள்ளியன்று அமிர்தரஸின் ஜோதா பதக் பகுதியில், ராவணனின் உருவ பொம்மையை எரிப்பதை பார்க்க வந்த பொது மக்கள் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்ட பகுதியில் ரயில் எப்போதும் மெதுவாக வரும் என்று கூறியுள்ளார்.

நவ்ஜோத் சிங்கின் மனைவி நவ்ஜோத் கவுர் இந்த விழாவில் விருந்தினராக கலந்து கொண்டார். விபத்து நடந்த செய்தி அறிந்ததும், அந்த இடத்தை விட்டு உடனே கிளம்பினார். மேலும் எதிர்கட்சியினர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த சவுராப் மதன் மித்து மற்றும் விஜய் மதன் என்பவரின் மகன் மீதுவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் நவ்ஜோத் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், நானும், எனது மனைவியும் இணைந்து அமிர்தசரஸ் ரயில் விபத்தில் சிக்கி பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தத்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு சிறப்பான தரத்தில் கல்வி, வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுப்போம் என்றார்.

மேலும், கணவர்களை இழந்த பெண்களுக்கு அவர்களுக்கு தேவையான அளவில் நிதியுதவி வழங்கப்படும். இவை அனைத்தும் எங்கள் சொந்த செலவில் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.