11,000 கிமீ வரை நீண்ட 'சூரிய கிரகணம்', எப்போது நிகழ்கிறது, எப்படி காணலாம்?

லா செரீனா, சிலி, அர்ஜென்டினா, புவெனஸ் அயர்ஸ் ஆகிய பகுதிகளில் முழுமையாகவும், உருகுவே, பராகுவே, எக்குவடோர், மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் பகுதியாகவும் தென்படும்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
11,000 கிமீ வரை நீண்ட 'சூரிய கிரகணம்', எப்போது நிகழ்கிறது, எப்படி காணலாம்?

Solar Eclipse: ஜூலை 2 ஆம் தேதியன்று இந்த சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது (AFP PHOTO)


ஜூலை 2 ஆம் தேதியன்று இந்த சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. அமெரிக்க கிரகணத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் களித்து ஏற்படும் சூரிய கிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் நடக்கும் இந்த சூரிய கிரகணம் தென் அமெரிக்கா மற்றும் தெற்கு பசிபிக் பகுதிகளில் ஜூலை 2 அன்று தென்படவுள்ளது. மேலும், சிலி மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் இருந்தும் இந்த கிரகணத்தை காணலாம். இந்த 11,000 கிமீ நீண்ட சூரிய கிரகணத்தின் பெரும்பகுதி கடலின் மேலேயே நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணம் 4 நிமிடங்கள், 33 நொடிகள் வரை நீடித்திருகக்கும். 

அங்கு உள்ளவர்கள் மட்டும்தான் இந்த கிரகணத்தை காண முடியுமா, உலகின் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் இந்த கிரகணத்தை எப்படி காண்பது, எப்போது இந்த கிரகணம் நிகழப்போகிறது?

சூரிய கிரகணம் என்றால் என்ன?

சூரிய கிரகணம் என்பது சூரியன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது ஏற்படும் நிகழ்வு. 

'சூரிய கிரகணம் 2019' - எங்கெல்லாம் தென்படும்?

லா செரீனா, சிலி, அர்ஜென்டினா, புவெனஸ் அயர்ஸ் ஆகிய பகுதிகளில் முழுமையாகவும், உருகுவே, பராகுவே, எக்குவடோர், மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் பகுதியாகவும் தென்படும். இந்த தகவலை ஸ்பேஸ்.காம் (Space.com) வெளியிட்டுள்ளது.

எத்தனை மணிக்கு இந்த கிரகணம் துவங்கும்?

கிரீன்விச் சராசரி நேரப்படி இந்த கிரகணம் மாலை 06:24 மணிக்கு துவங்கும். இது இந்திய நேரப்படி இரவு 11:54 மணி என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மற்ற இடங்களில் உள்ளவர்கள் இந்த கிரகணத்தை எப்படி காண்பது?

இந்த கிரகணத்தை காண நீங்கள் தென் அமெரிக்காவிற்கு பறந்த செல்ல தேவையில்லை. 

சான் பிரான்சிஸ்கோவின் எக்ஸ்ப்ளோரேட்டியம் அருங்காட்சியகம், சிலியிலுள்ள தேசிய அறிவியல் அறக்கட்டளையின் செரோ டோலோலோ ஆய்வகத்திலிருந்து, இந்த கிரகணத்தை இணையத்தில் நேரடியாக ஒளிப்பரப்பவுள்ளது. இதற்கென பிரத்யேகமாக ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் அமைப்புகளுக்கு பிரத்யேகமாக ஒரு செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

சிலி நாட்டில், அந்த நாட்டு நேரப்படி மாலை 3:22 மணிக்கு இந்த கிரகணம் துவங்கவுள்ளது. இந்த கிரகணம் துவங்குவதை பார்வையாளர்கள், சூரியனின் கீழ் இடதுபுறத்திலிருந்து காணலாம். 3:22 மணிக்கு துவங்கும் இந்த கிரகணம், மாலை 4:00 மணி அளவில், பாதி நிலையையும் அடையும். மாலை 4:20 மணியின்போது, முழு சூரிய கிரகணம் நிகழும். இந்த கிரகணம்  4 நிமிடங்கள், 33 நொடிகள் வரை நீடித்திருகக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்த சூரிய கிரகணம், டிசம்பர் 14, 2020 அன்று நிகழும். இந்த கிரகணமும் சிலி, அர்ஜென்டினா ஆகிய பகுதிகளிலேயே தென்படும் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................