This Article is From Apr 10, 2019

ஒரே நாளில் இனி ட்விட்டரில் 1000 பேரை ஃபாலோ செய்ய முடியாது!

ஒருநாளைக்கு 1000 பேரை ஃபாலோ செய்ய வசதி இருந்த ட்விட்டரில், 400 என குறைக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் இனி ட்விட்டரில் 1000 பேரை ஃபாலோ செய்ய முடியாது!

ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டு வரக் காரணம், 'ஸ்பேம்' (Spam) ஏற்படுவதை குறைப்பதே ஆகும்.

ட்விட்டரில் ஃபாலோ செய்யும் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது ட்விட்டர் நிறுவனம். ஒரு நாளைக்கு ஒரு அக்கவுண்ட்டில் இருந்து குறிப்பிட்ட அளவிற்கு தான் ஃபாலோ செய்ய முடியும் என்று புதிய விதியை கொண்டு வந்துள்ளது ட்விட்டர். இந்த மாற்றம் கொண்டு வரக் காரணம், 'ஸ்பேம்' (Spam) ஏற்படுவதை குறைப்பதே ஆகும். ஒருநாளைக்கு 1000 பேரை ஃபாலோ செய்ய வசதி இருந்த ட்விட்டரில், 400 என குறைக்கப்பட்டுள்ளது.

"ஃபாலோ, அன்ஃபாலோ, ஃபாலோ, அன்ஃபாலோ இதை யார் செய்வார்கள்? கணக்கை ஸ்பேம் செய்பவர்கள் மட்டும்தான்" என்று ட்விட்டர் பாதுகாப்பு குழு ட்விட் செய்துள்ளது.

" அதனால், ஒரு நாளைக்கு ஃபாலோ செய்யும் எண்ணிக்கையை 1000-லிருந்து 400-க்கு குறைத்துள்ளோம். கவலைப்பட வேண்டாம், எல்லாம் விரைவில் சரியாகிவிடும்"

'பாட்ஸ்' (Bots) எனப்படும் மென்பொருள் ப்ரோகிராம் தானாக ட்விட்டர் கணக்குகளை பயன்படுத்தும், ட்விட்டரில் உள்ளவர்களை பின்தொடரும், அவர்கள் அந்த கணக்குகளை மீண்டும் பின்தொடர்வார்கள்.

 அதிகபடியாக ஃபாலோ செய்யும் படி வைத்தால், இந்த பாட் நடக்க வாய்ப்புள்ளது. அதில், மார்க்கெட்டிங் மெசேஜஸ், பின்தொடர்பவருக்கு ட்விட்டுகள் என தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. 

ஸ்பேம் நடக்க அதிக வாய்ப்பாக அமைவது, அதிகபடியான ஃபாலோ, அன்ஃபாலோ நடப்பதால் தான். அதனால் தான் ட்விட்டர் இந்த விதிமுறையை கொண்டு வந்துள்ளது.

.