This Article is From Aug 27, 2020

வரும் தேர்தலில் பாஜகவுக்கு தமிழக இளைஞர்கள் அதிகளவில் வாக்களிப்பார்கள்: அண்ணாமலை

தேர்தலில் எந்த இடத்தில் கட்சி போட்டியிட சொன்னாலும் அதற்கு தயாராக உள்ளேன். கட்சியில் என்ன பொறுப்பு வழங்கினாலும் அதை ஏற்று செயல்படுவேன்.

வரும் தேர்தலில் பாஜகவுக்கு தமிழக இளைஞர்கள் அதிகளவில் வாக்களிப்பார்கள்: அண்ணாமலை

வரும் தேர்தலில் பாஜகவுக்கு தமிழக இளைஞர்கள் அதிகளவில் வாக்களிப்பார்கள்: அண்ணாமலை

வரும் தேர்தலில் பாஜகவுக்கு தமிழக இளைஞர்கள் அதிகளவில் வாக்களிப்பார்கள் என பாஜவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கூறியுள்ளார். 

சமீபத்தில் பாஜவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கோவை பாஜக அலுவகலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, பாஜகவில் இணைந்தது பெருமையாக உள்ளது. சாதாரண மக்களுக்காக செயல்பட கூடிய கட்சியாக பாஜக உள்ளது. 

வரும் தேர்தலில் பாஜகவுக்கு தமிழக இளைஞர்கள் அதிகளவில் வாக்களிப்பார்கள். 45 வயதுக்கு குறைவான இளைஞர்கள் வருகிற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவை மிகவும் எதிர்நோக்கி உள்ளனர். 

தேர்தலில் எந்த இடத்தில் கட்சி போட்டியிட சொன்னாலும் அதற்கு தயாராக உள்ளேன். கட்சியில் என்ன பொறுப்பு வழங்கினாலும் அதை ஏற்று செயல்படுவேன்.  

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு இல்லை. இந்தி படிக்க தேவையில்லை. மத்திய அரசில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும். 

பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம் தமிழின் தொன்மையை முதன்மைப்படுத்துகிறார். தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன். தமிழகத்தை மாற்றுப்பாதையில் கொண்டுபோக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பொருளாதாரத்தை சரியாக கையால்வதில் திராவிட கட்சிகள் தவறிவிட்டது என்று அவர் கூறியுள்ளார். 

.