This Article is From May 22, 2020

மே 31 வரை எங்கள் மாநிலத்துக்கு விமான சேவை வேண்டாம்: தமிழக அரசு கோரிக்கை!

வரும் திங்கள் முதல் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படவுள்ளது

மே 31 வரை எங்கள் மாநிலத்துக்கு விமான சேவை வேண்டாம்: தமிழக அரசு கோரிக்கை!

நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வயது முதியோர், கர்ப்பிணிகள் ஆகியோர் விமான பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • மே 25 முதல் உள்ளூர் விமான சேவை தொடங்க உள்ளது
  • விமானப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
  • கொரோனா அறிகுறி இருப்பவர்கள் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் மார்ச் மாதம் முதல் முடங்கிக் கிடக்கும் உள்ளூர் விமான சேவையானது, வரும் மே 25 முதல் மீண்டும் தொடங்க உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு, வரும் மே 31 ஆம் தேதி வரை தங்கள் மாநிலத்துக்கு விமான சேவை வேண்டாம் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. 

இது குறித்து தமிழக அரசு, ‘வரும் மே மாதம் 31 ஆம் தேதி வரை எங்கள் மாநிலத்துக்கு விமானங்களை இயக்க வேண்டாம் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் கேடுடக் கொள்கிறோம்' எனக் கோரியுள்ளது.

மேலும், சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், நகரத்தில் டேக்சி மற்றும் போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் குறைவாக உள்ளதெனவும் சுட்டிக்காட்டியுள்ளது தமிழக அரசு. 

வரும் திங்கள் முதல் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படவுள்ள நிலையில், அதற்கான விதிமுறைகளை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வயது முதியோர், கர்ப்பிணிகள் ஆகியோர் விமான பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

விமான போக்குவரத்து அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட புதிய விதிமுறைகள்:

  • பயணிகள் பயண நேரத்திற்கு 2 மணி நேரம் முன்பாகவே விமான நிலையம் வந்தடைய வேண்டும்.

  •  கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

  •  இணைய வழி சென்-இன்க்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது, பைகளுக்கான டேக்குகளையும் ஆன்லைனிலே பெற வேண்டும்.

  • ஒரு பயணி ஒரு கை பைக்கும்,  ஒரு செக்-இன் பேக் மட்டுமே கொண்டு செல்வதற்கு அனுமதி, அதற்கும் ஆன்லைனிலே அனுமதி பெற்று பையில் டேக் மாட்டியிருக்க வேண்டும்.

  • நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள பயணிகளுக்கு அனுமதி கிடையாது. 

  • பயணிகள் ஆரோக்யா சேது செயலி பயன்படுத்த வேண்டும் அல்லது, சுய அறிக்கை படிவம் மூலம் உடல்நல தகவல்களை தரலாம்.

  •  சமூக இடைவெளியை அனைத்து இடங்களிலும் கடைபிடிக்க வேண்டும், அதற்காக குறிப்பிடப்பட்டுள்ள அடையாளங்களை பின்பற்ற வேண்டும்.

.