This Article is From Sep 18, 2020

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.18) கொரோனா நிலவரம்!

இன்று மட்டும் 5,525 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,75,717 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.18) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட 83,701 பேரில், 5,488 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 63,03,466 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இன்று 67 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 8,685 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,488 பேரில் 3293 பேர் ஆண்களும், 2,194 பேர் பெண்களாவார்கள். இதுவரை 3,19,939 ஆண்களும், 2,10,939பெண்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

தமிழகம் முழுவதும் தற்போது பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையானது 174 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 5,525 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,75,717 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது 46,506 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்

மாவட்ட வாரியாக இன்று (செப்.18) புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:

அரியலூர் - 33

செங்கல்பட்டு - 265

சென்னை - 989

கோவை - 543

கடலூர் - 254

தர்மபுரி - 106

திண்டுக்கல் - 88

ஈரோடு - 118

கள்ளக்குறிச்சி - 91

காஞ்சிபுரம் - 151

கன்னியாகுமரி - 11

கரூர் - 68

கிருஷ்ணகிரி - 50

மதுரை - 82

நாகை - 80

நாமக்கல் - 108

நீலகிரி - 72

பெரம்பலூர் -11

புதுக்கோட்டை - 123

ராமநாதபுரம் - 31

ராணிப்பேட்டை -53

சேலம் - 288

சிவகங்கை - 38

தென்காசி - 97

தஞ்சை - 162

தேனி - 67

திருப்பத்தூர் - 81

திருவள்ளூர் - 258

திருவண்ணாமலை - 148

திருவாரூர் - 101

தூத்துக்குடி - 90

திருநெல்வேலி - 104

திருப்பூர் - 187

 திருச்சி - 136

வேலூர் - 118

விழுப்புரம் - 139

விருதுநகர் - 39

.