This Article is From Dec 04, 2018

மேகதாது அணைக்கு எதிராக அனைத்து கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சியில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

மேகதாது அணைக்கு எதிராக அனைத்து கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சிகளின் சார்பாக திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முறையாக நிறைவேற்றாமல் கர்நாடக அரசு இழுத்தடித்து வருகிறது. இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது.

மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதையடுத்து, அதற்கான பணிகளில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்த நடவடிக்கை மேகதாது அணை விவகாரத்தால் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த விவகாரத்தை எதிர்கொள்வது தொடர்பாக திமுக சார்பில் சில நாட்களுக்கு முன்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக திருச்சியில் அனைத்துக்கட்சி சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

.