This Article is From Jan 27, 2020

தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது தந்தவர்களை அடிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் நிதிஷ்குமாரே குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வருகிறார்.

தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது தந்தவர்களை அடிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது தந்தவர்களை முதலில் கூட்டி வந்து அடிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவின் மகன் திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசியதாவது, கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது முன் அனுமதி பெறாமலே அவரை சந்திக்கும் நபர்களில் விக்கிரமராஜாவும் ஒருவர்.

மணமகன், மணமகள் இருவரும் வீட்டில், மத்திய - மாநில அரசு போன்று அமைதியாக இருக்கக் கூடாது. கேள்வி கேட்க வேண்டும். குடியுரிமை சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளித்த ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தற்போது அதை எதிர்ப்பதாகவும், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் நிதிஷ்குமாரே குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வருகிறார்.

சிஏஏ-வை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினால் நானே இவர்களை பாராட்டுவேன் தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதற்காக விருது பெற்றுள்ளதாக முதலமைச்சர் கூறி வருகிறார். முதலில் தமிழகத்துக்கு விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும். 

தமிழகத்தில் தற்போது லஞ்சம், ஊழல், கமிஷன் ஆட்சி தான் நடக்கிறது. எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமையை கொண்டு வந்தவர் பெரியார். இன்று அவரையே விமர்சிக்கும் நிலை உள்ளது என்று அவர் கூறினார்.

.