ஒரே குழப்பமா இருக்கே! மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் வைரல் டான்ஸ் வீடியோ!!

நடிகை ஸ்ருதி மற்றும் சின்னதிரையைச் சேர்ந்த கவுரவ் கபூர் உள்ளிட்டோரும் இந்த நடன வீடியோவால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

ஒரே குழப்பமா இருக்கே! மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் வைரல் டான்ஸ் வீடியோ!!

பலரை குழப்பத்தில் தள்ளிய வைரல் நடன வீடியோ.

காண்போர் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தும் டான்ஸ் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த டான்ஸ் வீடியோவை @cinnabar_dust என்ற ட்வீட்டர் பயனாளர் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் அந்த பதிவில், வீடியோவின் கடைசிக் கட்டத்தைப் பார்த்த பிறகு பார்வையாளர்கள் அனைவரும் வீடியோவை "மீண்டும் மீண்டும்" பார்ப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில், 4 பேர் கொண்ட குழு ஸ்டிரிட் டான்ஸர் 3D என்ற திரைப்படத்தின் முக்காபுலா பாடலுக்கு நடனமாடுகிறது. அவர்களது ஒன்றிணைந்த நடனமும், ஒத்திசைந்த நகர்வுகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தாலும், வீடியோவின் இறுதியில் நடக்கும் சம்பவம் பார்ப்பவர்களை நிச்சயம் ஒரு நிமிடம் தலைச்சுற்ற வைத்து விடுகிறது.  

தலைச்சுற்ற வைக்கும் அந்த வைரல் வீடியோ இங்கே...

2 நாட்கள் முன்னதாக பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த வீடியோவை இதுவரை 3.9 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். மேலும், 16,000 பேர் லைக் செய்துள்ளனர். 4,700 பேர் ரீட்வீட் செய்துள்ளனர். 

நடிகை ஸ்ருதி மற்றும் சின்னதிரையைச் சேர்ந்த கவுரவ் கபூர் உள்ளிட்டோரும் இந்த நடன வீடியோவால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

இதன், கமெண்ட் பிரிவில், பலரும் இது புத்திசாலித்தனமான நடனமா? அல்லது தந்திரமான நடனமா? அல்லது எடிட்டிங்கா? என்று பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

ஒரு சிலர் ”தலை அசைவை” கண்டுபிடிக்கும் முயற்சியில் மீண்டும் மீண்டும் வீடியோவைப் பார்த்ததாக ஒப்புக்கொண்டனர், மற்றவர்கள் அதை எப்படி இழுத்துத் திருப்ப முடிந்தது என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர். 

இந்த வீடியோவை பார்த்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை கமெண்ட் பரிவில் பதிவிடுங்கள்...

Listen to the latest songs, only on JioSaavn.com