சகோதர பாசத்தை அடிச்சிக்க முடியுமா…! -Will Smith பகிர்ந்த நெகிழ வைக்கும் வீடியோ

பலரும் “மனதைக் கவர்ந்த வீடியோ” என்று கமெண்ட் செய்துள்ளனர்.

சகோதர பாசத்தை அடிச்சிக்க முடியுமா…! -Will Smith பகிர்ந்த நெகிழ வைக்கும் வீடியோ

மூத்த சகோதரன் தன்னுடைய சகோதரிக்கு ஆறுதல் கூறுவதைக் காட்டுகிறது

கடந்த ஆண்டு வைரலாகிய வீடியோ இணையத்தில் மீண்டும் வைரலாகியுள்ளது. ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் இந்த வீடியோவை இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

மூத்த சகோதரன் தன்னுடைய சகோதரிக்கு கூடைபந்தாட்டத்தின் போது  கோல் அடிக்கத் தவறியபோது ஆறுதல் கூறுவதைக் காட்டுகிறது. 

இந்த வீடியோவை  கடந்த் ஆண்டு கலிபோர்னியாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பயனாளர் சரஹன்னே மோரா பகிர்ந்துள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. செல்வி மோராவின் மகள் கோல் அடிக்கத்த தவறும்போது  அவளுடைய மூத்த அண்ணன் ஆறுதல் படுத்துகிறான். 

‘பரவாயில்லை நீ உறுதியானவள்' என்று கட்டிப் பிடித்து அவளைப் பாராட்டுகிறான். பின் அண்ணனே தங்கையை தூக்கி கோல் அடிக்க வைக்கிறான். சிறுமியின் புன்னகையுடன் வீடியோ முடிகிறது. 

Newsbeep

“உடன் பிறப்பின் அன்பை போல் வேறெதுவும் வெற்றி பெறாது” என்ற வாசகத்துடன் பகிர்ந்துள்ளார்.  வில் ஸ்மித் இண்ஸ்டாகிராமில் பகிர்ந்ததிலிருந்து 4.5 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது. 

பலரும் “மனதைக் கவர்ந்த வீடியோ” என்று கமெண்ட் செய்துள்ளனர். 

Click for more trending news