பள்ளி மாணவிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டிய உடற்கல்வி ஆசிரியர் கைது!!

உடல்கல்வி ஆசிரியர் மீது POCSO சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை  நடத்தி வருகின்றனர். 

பள்ளி மாணவிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டிய உடற்கல்வி ஆசிரியர் கைது!!
Thiruvananthapuram:

கேரளாவில் பள்ளி மாணவிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டிய உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி ஒன்றில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

இதுதொடர்பாக என்.டி.டி.வி.க்கு நெடுமங்காடு காவல்துறை அதிகாரி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

பள்ளி மாணவியை உடல்கல்வி ஆசிரியர் தகாத வார்த்தையால் திட்டியதாக புகார் எழுந்தது. இதுபற்றி மாணவி ஒருவர் பள்ளி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். சுமார் 9 மாணவிகள் பொதுவான புகாரை கையெழுத்திட்டு அளித்துள்ளனர். அந்த புகாரில், உடல்கல்வி ஆசிரியர் பலமுறை ஆபாச வார்த்தையால் மாணவிகளை திட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளி முடிந்ததும் மாணவர்களும் மாணவர்களும் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த உடல்கல்வி ஆசிரியர் கட்டாயப்படுத்தியதாகவும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவங்கள் பள்ளிக்கு ஒருகிலோ மீட்டர் உள்ளதாக நடந்திருக்கிறது. இவ்வாறு உடலுறவில் ஈடுபடும் மாணவர்களை உடல்கல்வி ஆசிரியர் தனது காரில் அழைத்துச் சென்றிருக்கிறார்.
இவ்வாறு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். 

உடல்கல்வி ஆசிரியர் மீது POCSO சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை  நடத்தி வருகின்றனர்.