This Article is From Aug 01, 2019

சிறாருக்கு பாலியல் தொல்லை அளித்தால் மரண தண்டனை! நாடாளுமன்றத்தில் மசோதாவுக்கு ஒப்புதல்!!

நாடாளுமன்றத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மசோதாவை தாக்கல் செய்தார்.

சிறாருக்கு பாலியல் தொல்லை அளித்தால் மரண தண்டனை! நாடாளுமன்றத்தில் மசோதாவுக்கு ஒப்புதல்!!

சிறுவர்களை வைத்து ஆபாசம் படம் எடுத்தால் கடும் தண்டனை வழங்கும் மசோதா ஏற்கனவே நிறைவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

New Delhi:

சிறாருக்கு பாலியல் தொல்லை அளித்ததால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பாலியல் தொல்லையில் இருந்து சிறுவர்களை பாதுகாக்கும் மசோதா (திருத்தம்) 2019-யை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தாக்கல் செய்தார். 

பின்னர் பேசிய அவர், இந்த மசோதா என்பது வாக்கு வங்கியை உருவாக்குவதற்காக அல்ல. மாறாக இந்தியாவின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது என்று கூறினார். 

அப்போது காங்கிரஸ் எம்.பி. ரம்யா ஹரிதாஸ் உன்னாவோ சம்பவத்தை எடுத்து பேச ஆரம்பித்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஸ்மிருதி, இந்த மசோதாவை அரசியல் ரீதியாகவோ அல்லது தனி நபர் ஆதாயத்திற்காகவோ அணுகக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர் நாட்டில் 39 சதவிதம் அதாவது 43 கோடி சிறுவர் சிறுமியர் உள்ளனர். அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஏற்கனவே சிறுவர்களை வைத்து ஆபாசம் படம் எடுப்பதற்கு கடும் தண்டனை அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூக ரீதியாக இந்த பிரச்னையை அணுக வேண்டும் என்றார். 

இதன்பின்னர் மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியது. மசோதாவை ஆதரித்து உறுப்பினர்கள் பலர் பேசினர். 

.