This Article is From Nov 01, 2018

#MeToo புகாருக்கு ஆளானால் கடுமையான நடவடிக்கை இருக்கும்: எச்சரிக்கும் சுந்தர்பிச்சை

அல்ஃபெபட் நிறுவனம் டிவால் குறித்து எந்தத் தகவலையும் வெளியிடவில்லை

#MeToo புகாருக்கு ஆளானால் கடுமையான நடவடிக்கை இருக்கும்: எச்சரிக்கும் சுந்தர்பிச்சை

கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை கூகுள் ஊழியர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்

San Francisco:

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் தனது நிறுவனத்தின் பணியாற்றிய ஊழியரைப் பாலியல் புகார் காரணமாக எந்தவித பணப்பயனும் தராமல் அவரைப் பணியிலிருந்து நீக்கியுள்ளது. ரிச் டிவால் எனும் எக்ஸ் லேப் சேவையின் இயக்குநரை அல்ஃபெபட்டில் பணிபுரியும் பெண்கள் பலர் அளித்த #MeToo புகாரின் பேரில் பணியிலிருந்து கடந்த செவ்வாய் அன்று நீக்கியுள்ளது. டிவால் குறித்து ஆல்ஃபபெட் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் ''பணியாளர்கள் பணியிடத்தில் மோசமாக நடந்து கொள்வதாக புகார்கள் வந்துள்ளன. இதற்காக முதலில் எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு சிஇஓவாக இந்தப் புகார்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த 2 வருடங்களில் 13 மூத்த அதிகாரிகள் உட்பட 48 பணியாளர்களைப் பாலியல் புகார்கள் வந்ததால் பணியிலிருந்து நீக்கியுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

கூகுள் பணியாளர்களைச் சந்தித்த சுந்தர்பிச்சை ஆன்ட்ராய்ட் பிரிவில் பணிபுரியும் ரூபின் எக்ஸிட் பேக்கேஜாக 90 மில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளார். அவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு இருந்தது என்று நியூயார்க் டைம்ஸில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து விளக்கமளித்த கூகுள் செய்தி தொடர்பாளர் சாம் சிங்கர் ரூபின் அவராக தான் பதவி விலகினார் என்று கூறியுள்ளார்.

சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள அறிக்கையில் "அலுவலகத்துக்குள் பாதுகாப்பை உறுதி செய்வதில் நாங்கள் அதிக முனைப்புடன் செயல்படுகிறோம். பாலியல் புகார்கள் அனைத்தையும் நாங்கள் சரியாக விசாரித்து சரியான நடவடிக்கைகள் எடுக்கவுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

NDTV-யிடம் நீங்கள் ஏதேனும் தகவல் தெரிவிக்க விரும்பினால், இந்த மின்னஞ்சலை பயன்படுத்துங்கள் worksecure@ndtv.com

.