'சத்தியம் வெல்லும் என்பதை நிரூபித்திருக்கிறது' - உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து கமல் கருத்து

தீர்ப்பை வரவேற்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யக்கூடாதென்று வலியுறுத்தியுள்ளார். 

'சத்தியம் வெல்லும் என்பதை நிரூபித்திருக்கிறது' - உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து கமல் கருத்து

மது பாட்டில்களை ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

பொது முடக்கம் முடியும் வரையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளரும், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியுமான மவுரியா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சத்தியம் வெல்லும் என்பதை தீர்ப்பு நிரூபித்துள்ளதாக கூறியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், 'நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது.எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி' என்று கூறியுள்ளார்.

தீர்ப்புக்கு முன்பாக மதியம் கருத்து தெரிவித்த கமல்ஹாசன், 'மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர்.நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர்.ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா?' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Newsbeep

இந்த நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. இது மதுப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் பெண்களும், சமூக ஆர்வலர்கள் இந்த உத்தரவை வரவேற்றுள்ளனர்.

ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தீர்ப்பை வரவேற்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யக்கூடாதென்று வலியுறுத்தியுள்ளார்.